sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

தூக்கம் நோய் தீர்க்கும் நல்ல மருந்து

/

தூக்கம் நோய் தீர்க்கும் நல்ல மருந்து

தூக்கம் நோய் தீர்க்கும் நல்ல மருந்து

தூக்கம் நோய் தீர்க்கும் நல்ல மருந்து


PUBLISHED ON : நவ 12, 2017

Google News

PUBLISHED ON : நவ 12, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு ஆரோக்கியமான மனிதன் குறைந்தது எட்டு மணி நேரம் ஆழ்ந்து உறங்க வேண்டும். அப்படி உறங்கினால் பல நோய்கள் நெருங்காது. இந்தியர்களை பொறுத்தவரை உழைக்கும் நேரத்தை விட, உறங்கும் நேரம் குறைவு.

இதற்கு முக்கிய காரணம் மன உளைச்சல், கவலை, டென்ஷன், வாழ்க்கை மீதான பயம் காரணமாக இருக்கிறது. தூக்கமின்மையை 'இன்சோம்னியா' என்று அழைக்கின்றனர்.

உடலுக்குத் தேவையான அளவு தூங்க முடியாமல் இருப்பது நோய் அறிகுறியாகும். தூங்குவதில் சிரமம் இருந்து, குறைவாக தூக்கத்தினால், இது போன்ற கோளாறுகள் ஏற்படும். இது ஒரு நோயின் அறிகுறியாகும். உறக்கமின்மையை ஒரு நோயாக கருத முடியாது. ஆனால் நோய்கள் உருவாக தூக்கமின்மை காரணமாக அமையும்.

தூக்கமின்மையில் மூன்று வகை உள்ளன. எளிதில் குணமாகக்கூடிய தூக்கமின்மை, சற்று கடுமையான, தீவிரமான தூக்கமின்மை, முற்றிய தூக்கமின்மை எனக் கூறுகின்றனர். நிலையற்ற தூக்கமின்மை, சில நாட்களிலிருந்து சில வாரங்கள் வரை நீடித்து இருக்கும். இது வேறொரு கோளாறின் விளைவாக ஏற்படக்கூடும்.

தூங்கும் சூழலில் மாற்றம், நேரத்தில் மாற்றம், கடுமையான மனச்சோர்வு, மன உளைச்சல் ஆகியவை காரணங்களாக இருக்கலாம். தூக்கமின்மை அல்லது குறைவான தூக்கத்தினால், மனநிலை தெளிவாக இருக்காது. தீவிரமான தூக்கமின்மை என்பது, ஒரு மனிதன் மூன்று வாரம் முதல் ஆறு மாதங்கள் வரை தொடர்ந்து நல்ல தூக்கத்தை பெறாமல் போய்விடுகிறது. இதை சரிப்படுத்தி விடலாம்.

நீடித்த தூக்கமின்மை என்பது பல ஆண்டுகளுக்கு நீடித்து இருக்கும். இது முதன்மையான கோளாறு அல்லது மற்றொரு கோளாறினாலும் ஏற்படலாம். இதன் விளைவுகள் இதன் மூல காரணத்திலிருந்து வேறுபட்டு இருக்கும்.

தூங்கவே முடியாத நிலை: தசைகளில் தளர்ச்சி, மனமருட்சிகள், மன தளர்ச்சிகள் இதனால் ஏற்படுகின்றன. இந்த கோளாறுடன் வாழும் சிலருக்கு நடக்கும் சம்பவங்கள் மெல்ல நகர்வது, நடப்பதை போல் தெரியும். அதாவது ஸ்லோ மோஷன் போல் தெரியும். அசைகின்ற பொருட்கள் சுற்றுப்புறத்துடன் மங்கி, ஒருங்கிணைத்து காணப்படுகின்றது. இதனால் காட்சிகள் இரண்டு இரண்டாகவும் தெரிய நேரிடுகிறது.

நிரந்தரமற்ற தூக்கமின்மை: இரவின் முதல் பாதியில் தூங்குவதற்கு சிரமப்படுவர். இது மனக்கலக்க நோயுடன் தொடர்புள்ளது.

நள்ளிரவு தூக்கமின்மை: நள்ளிரவில் விழிப்பவர் மீண்டும் உறங்குவதற்கு சிரமப்படுகின்றனர். விடியற்காலைக்கு சற்று முன்னரே விழிப்பு வரும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது. இதை இரவில் விழித்திருத்தல் என்றும் அழைக்கலாம். இது நடு மற்றும் நிறைவுறும் தூக்கமின்மை வகைகளாகும்.

நடு தூக்கமின்மை: இரவின் நடுப்பகுதியில் விழித்து, பின்னர் உறங்க சிரமப்படுவதாகும். இது வலி நோய்களுடனும், கட்டாய மருந்து உட்கொள்ளும் நோய்களுடன் தொடர்பு கொண்டது. மனிதர்களுக்கு வயது ஏற ஏற தூங்க வேண்டிய நேரம் குறையலாம் என்ற தவறான கருத்து பரவலாக நிலவுகிறது. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் நீண்ட நேரம் தூங்குகின்ற திறனை வயது ஏற ஏற இழக்கின்றனர்.

ஓய்வு உறக்கத்துக்கு சரியான நேரம் ஒதுக்கினால் போதும்; இப்பிரச்னைக்கு தீர்வு கிடைத்து விடும். சிரமம் இருப்பவர்கள் மருத்துவரை அணுகுவதே சிறந்த வழியாகும்.






      Dinamalar
      Follow us