sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

கற்கண்டு என்ற மாமருந்து

/

கற்கண்டு என்ற மாமருந்து

கற்கண்டு என்ற மாமருந்து

கற்கண்டு என்ற மாமருந்து


PUBLISHED ON : நவ 12, 2017

Google News

PUBLISHED ON : நவ 12, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

யானை இறந்தால் ஆயிரம் பொன், பனை இருந்தாலும் ஆயிரம் பொன் என்று ஒரு பழமொழி உண்டு. பனை கிழங்கில் இருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் மரமாகும். பனைநீரில் இருந்து பனங்கற்கண்டு தயாரிக்கப்படுகிறது. இது மிகச்சிறந்த மருத்துவ குணம் உடையது.

பனங்கற்கண்டு வாத பித்தம் நீக்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை கருப்பட்டி என்பர். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாக்குவது சர்க்கரை, பனங்கற்கண்டு எனப்படும்.

பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுரத்தினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது.

இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது. வயிற்றுப் புண்ணை குணப்படுத்தி, ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.

இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது. இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.

பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டி, எந்த கலப்படமும் இல்லாமல் இயற்கையாக கிடைக்கும் இனிப்பாகும். நாட்டு மருந்து தயாரிப்புக்கு கருப்பட்டி பயன்படுத்தப்படுகிறது. கருப்பட்டி, ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேனிக்கு பளபளப்பை தரும். கரும்பு சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதைச் சாப்பிடலாம். நமக்குத் தேவையான கால்சியம் இதில் கிடைக்கிறது.

சுக்கு கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு ஏற்றது. சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும். அந்தத் தாய்ப்பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்க்குரு நீங்கும்.

பனங்கற்கண்டை அடிக்கடி பயன்படுத்தி வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம், தாகம் போன்றவை நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும். பனங்கிழங்கிற்கு உடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு. உடல் அழகும், பலமும் அதிகரிக்கும். பதனீர் உடல் உஷ்ணத்தை தடுக்க சிறந்த பானமாகும். தினமும் காலையில் வெறும் வயிற்றில், 200 மில்லி அளவுக்கு பதனீர் குடித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்






      Dinamalar
      Follow us