sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/உடலை உறுதியாக்கும் ஸ்பிக்கிங்

உடலை உறுதியாக்கும் ஸ்பிக்கிங்

உடலை உறுதியாக்கும் ஸ்பிக்கிங்


PUBLISHED ON : ஜூலை 23, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 23, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தற்போதைய நவநாகரிக காலத்தில், ஆண்களுக்கும், பெண்களுக்கும், போதிய உடற்பயிற்சி இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. விளைவு, உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்து, நோய்களால் அவதிப்படுவதும், சிறு வயதிலேயே தொப்பை ஏற்படுவதும் என, பிரச்னைகள் சர்வ சாதாரணமாகி விட்டன.

வேறு வழியின்றி, உடலின் கலோரிகளை எரிப்பதற்கு, பணம் செலவழித்து 'ஜிம்'முக்கு பயிற்சி செல்ல வேண்டிய நிலைக்கு பலரும் ஆளாகின்றனர். இந்த பிரச்னைக்கு எளிய தீர்வாக இருப்பது, 'ஸ்கிப்பிங்'. இது, பெண் பிள்ளைகளின் விளையாட்டு என்றே பலரும் தவறாக எண்ணியிருக்கின்றனர். இந்த எண்ணம்தான், 'ஸ்கிப்பிங்' பயிற்சி செய்ய விடாமல், ஆண் பிள்ளைகளை தடுப்பதாகவும், உடற்பயிற்சி ஆசிரியர்கள் கூறுகின்றனர். உண்மையில், உடலை, வலுவாக்கி, அழகாக்கும் எளிய உடற்பயிற்சிகளில் 'ஸ்கிப்பிங்' முதன்மையானது.

'ஸ்கிப்பிங்' செய்வதன் மூலம் உடலில் ரத்த அழுத்தம் சீராகும்; அதிகப்படியாக இருப்பின், குறையும். உடல் பருமன் பிரச்னை தீரும். தினமும் இப்பயிற்சி செய்தால், தேவையற்ற கொழுப்பு கரைந்து, தொப்பை பிரச்னை படிப்படியாக குறையும்.

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும் புத்துணர்ச்சியையும் தரக்கூடியது ஸ்கிப்பிங்; இப்பயிற்சியால், இருதயமும், நுரையீரலும் வலுப்பெறுகின்றன. கை, கால், தொடையில் இருக்கும் தசைகளுக்கு அதிக சக்தியும், வலுவும் கிடைக்கின்றன.

'ஸ்கிப்பிங்' பயிற்சியை துவங்குமுன், இறுக்கமான உடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். ஷூ பயன்படுத்துவது நல்லது. 'ஸ்கிப்பிங்' கயிறு சரியான அளவு கொண்டதாக இருப்பது முக்கியம். அதிக நீளமாகவோ, குட்டையாகவோ இருப்பது கூடாது. மிதமான அல்லது வெறும் வயிறுடன் பயிற்சி செய்வதே சரியானது. ஸ்கிப்பிங் பயிற்சி, சமமான, வழுக்கும் தன்மை இல்லாத இடத்தில் செய்ய வேண்டும். கற்கள் மிகுந்த இடத்திலோ, மார்பிள் பதித்த

தரைகளிலோ பயிற்சி செய்யக்கூடாது.

செய்வது எப்படி: முதலில், முதுகு மற்றும் தலையை நேராக வைத்துக்கொள்ள வேண்டும். பின் ஸ்கிப்பிங் கயிறை உங்களது பின் குதிகாலின் அடிப்பகுதியில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் மெதுவாகக் கயிறைச் சுழல விட, அந்த வேகத்துக்கு ஏற்பக் கயிறைத் தாண்ட வேண்டும். முதலில் மெதுவாக ஆரம்பித்து, பின் வேகத்தைக் கூட்ட வேண்டும்.

இவ்வாறு, நின்ற இடத்திலேயே ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதே, முதல்படி. தொடர்ந்த பயிற்சியின் மூலம் அடுத்தடுத்த நிலைகளை எட்ட முடியும். முன்புறம் தாவுதல், பின்புறம் தாவுதல், ஒடிக் கொண்டே தாவுதல், குறுக்கு வாக்கில் தாவுதல் என, பல வகைகளில் ஸ்கிப்பிங் பயிற்சி செய்யலாம்.

தினமும், அரை மணி நேரம் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால், உடலில் இருக்கும் 200 கலோரிகள் வரை எரிந்து காலியாகி விடும்; அதன் மூலம் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். ஒரு சில மாதங்கள் 'ஸ்கிப்பிங்' தொடரும் பட்சத்தில், தொப்பை உள்ளிட்ட உடல் பிரச்னைகள், நிச்சயமாக இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us