sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

தக்காளி இருக்க கவலை எதற்கு!

/

தக்காளி இருக்க கவலை எதற்கு!

தக்காளி இருக்க கவலை எதற்கு!

தக்காளி இருக்க கவலை எதற்கு!


PUBLISHED ON : ஜூலை 16, 2017

Google News

PUBLISHED ON : ஜூலை 16, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகில், உருளைக்கிழங்கு அடுத்தபடியாக அதிகம் விளைவது தக்காளி தான். சமையலில், தக்காளியின் பங்களிப்பு அதிகம். நோய் எதிர்ப்பு மற்றும் மருத்துவ குணம் கொண்ட காய், கனிகளில் தக்காளி முதன்மையானதாக விளங்குகிறது. நோய் தடுப்பு காரணிகள், தக்காளியில் ஏராளம் உள்ளன.

உடல் பருமனை குறைக்க விரும்புவோர், பழுத்து சிவந்த தக்காளி பழங்களை தொடர்ந்து இரண்டு மாதங்கள் காலையில், பழமாகவோ, சாறாகவோ உட்கொண்டு வந்தால், கொழுப்பு நிறைந்த உடல் கரைந்து, எடை குறையும். தக்காளியில் மாவுச்சத்து குறைவாகவும், தாது உப்புகளும், வைட்டமின்களும் அதிகம் இருப்பதால், நல்ல பலன் கிடைக்கும்.

இதனால், உடல் நலக்குறைவு ஏற்படாமல் உடல் பருமனை குறைக்கலாம்.

தூக்கம் வர வேண்டுமா? இரவு உணவு நேரத்தில், தக்காளி சூப் சாப்பிடுவது மிகவும் நல்லது. சூப் சாப்பிட்டவுடன் நன்றாக பசி எடுக்கும். சாப்பாட்டுக்கு பின் ஜீரண பிரச்னை இருக்காது; நன்றாக தூக்கம் வரும். பூண்டு, இஞ்சி, சீரகம், மிளகு, உப்பு ஆகியவற்றை, நல்லெண்ணெயில் வதக்கி, மசிய வேகவைத்து, வீட்டில் தக்காளி சூப் தயாரித்து சாப்பிடலாம். நோயாளிக்கும் கொடுப்பது நல்லது.

தக்காளி சூப் சாப்பிட்டால், நாவறட்சி ஏற்படாது.

தக்காளியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால், உடலில் உள்ள நோய் கிருமிகளையும் அகற்றி, உடலை சுத்திகரிக்கிறது. சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் கட்டுபடுத்தும். இரவு நேரத்தில், பார்வை குறைபாடு உள்ளவர்கள், தக்காளிச்சாறு குடித்து வருவது மிகவும் நல்லது. இக்குறைபாடு, மெல்ல, மெல்ல நீங்கும்.

ஊக்குவிக்கும் சக்தி: பித்த வாந்தி, மலச்சிக்கல், உணவு செரியாமை, வாய்வு தொந்தரவு, நெஞ்செரிச்சல் முதலியவை குணமாக, ஒரு டம்ளர் தக்காளிச்சாறில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வர, காசநோய், நுரையீரல் நோய், ஆஸ்துமா போன்ற மூச்சுக்குழல் நோய்கள் குணமாகும்.

தக்காளியை பழமாகச் சாப்பிட்டாலும், சாறாக அருந்தினாலும், உடனே உடலில் கலந்து, சக்தியை ஊக்குவிக்கும். சாப்பிட்ட மற்ற உணவுகள் உடனே ஜீரணமாகும். ரத்த சோகை நோய் உள்ளவர்கள், தக்காளி சாறை, வாரத்தில் 2 அல்லது 3 முறை அருந்தலாம். அதிகளவு வைட்டமின் 'ஏ', தக்காளியில் அதிகம் உள்ளது. அதனால், பார்வைக் கோளாறுகளுக்கும், உடல் பலவீனத்துக்கும் தக்காளிப் பழத்தையும், சாறையும் பருகி வந்தால் பிரச்னை தீரும்.

'பளிச்' ஆகும் முகம்: நீண்ட நாட்களாக, சரிவர பராமரிக்காத முகத்தில், செல்கள் இறந்து, முகம் பொலிவிழந்து காணப்படும். தக்காளி சாறுடன் கால் டீஸ்பூன் ரவையைக் கலந்து, நன்றாக முகத்தில் தேய்த்து கழுவ வேண்டும். தொடர்ந்து இதைச் செய்து வந்தால், முகம் பிரகாசிக்கும்.

பெண்கள், முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்துக்கு கொடுப்பதில்லை. இதனால் கழுத்தில், கருவளையம் தோன்ற ஆரம்பித்து விடும். இதை, தக்காளி பேஸ்ட் மூலம் குணமாக்கலாம். தக்காளி சாறு அரை டீஸ்பூன், தேன் அரை டீஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை என, மூன்றையும் கலந்து பேஸ்ட் உருவாக்கி, கழுத்தில் கருவளையம் இருக்கும் இடத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்தால், கருவளையம் மறைந்து இயல்பு நிலைக்கு வந்து விடும்.






      Dinamalar
      Follow us