தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/உடல் உஷ்ணம் குறைய திரவ உணவுகள் அவசியம்

உடல் உஷ்ணம் குறைய திரவ உணவுகள் அவசியம்

உடல் உஷ்ணம் குறைய திரவ உணவுகள் அவசியம்


PUBLISHED ON : டிச 03, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 03, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தற்போது வேகமாக பரவி வரும் சுவாச பாதையை பாதிக்கும் வைரஸ் தொற்று, இந்த பருவத்தில் வழக்கமாக பரவக்கூடியது தான். கடந்த ஆண்டுகளை விட, தற்போது நம் நாட்டிலும், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.

அது மட்டுமன்றி, 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இவ்வைரசின் அறிகுறிகளாக, இருமல், சளி, மார்பு பகுதியில் இறுக்கம், மூக்கடைப்பு, காய்ச்சல் இருக்கும். உடல் வலி பொதுவான அறிகுறி. இதற்கு வலி நிவாரணி எடுத்துக் கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், நீண்ட நாட்கள் ஸ்டீராய்டு மாத்திரை, இம்மினோ சப்ரசன்ட் மாத்திரை சாப்பிடுவோர், கர்ப்பிணியர், குறை பிரசவத்தில் பிறந்த, 2 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம். எனவே, தொற்று பாதித்தவரின் அருகில் செல்லாமல் கவனமாக இருப்பது நல்லது.

குறிப்பாக, குழந்தைகளின் நுரையீரல் முழு வளர்ச்சி அடைந்து இருக்காது. கர்ப்பிணியருக்கு வைரஸ் பாதிப்பு வந்தால், கருவில் உள்ள குழந்தையையும் பாதிக்கும். ஆஸ்துமா, டி.பி., போன்ற நுரையீரல் கோளாறு உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெரியவர்களுக்கு நுரையீரல் திறன் குறைவாக இருப்பதால் சளி கட்ட, நுரையீரலின் கால் பாகம் செயலிழக்கச் செய்யும் நிமோனியா வரலாம்.

ஆன்டிபயாடிக் மருந்துகள் இதற்கு தேவைப்படாது. இந்த வைரஸ் இரண்டு, மூன்று நாட்கள் நம் உடலில் இருந்தால், தானாகவே நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி விடும். அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சை செய்தால் போதும். காய்ச்சல் இருந்தால், உடலின் வெப்பநிலை இயல்பாவதற்கு, திரவ உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

தைலம் தேய்ப்பது, ஆவி பிடிப்பது, மார்பு இறுக்கம், மூக்கடைப்பிற்கு நிவாரணம் தரும். கொரோனா பரவலில் நுரையீரல் அதிகம் பாதிக்கப்பட்டதால், அறிகுறிகள் மிதமாக இருந்தாலே மருத்துவ ஆலோசனைக்கு வருகின்றனர்.

தினசரி சமையலில் மிளகு, சுக்கு, மஞ்சள் சேர்த்து சாப்பிடுவது, சூப் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். பருவநிலை மாறும் போது, இயல்பாகவே நம் எதிர்ப்பு சக்தி குறையும். நோய் தொற்று ஏற்பட்ட இரண்டு - மூன்று நாட்களில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி, வைரசை அழித்து விடும்.

போதுமான அளவு உருவாகாமல் போனால், அறிகுறிகள் குறையாது. மூச்சு திணறுவது, ஆக்சிஜன் அளவு குறைந்து, சளி கட்ட மார்பில் இறுக்கம் போன்ற தீவிர அறிகுறிகள் இருந்தால், மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். கடந்த ஆண்டுகளில், 20 - 30 சதவீத பாதிப்பு இருந்தது. தற்போது, 40 சதவீதத்திற்கும் அதிகமானவர்களை பாதிக்கிறது.

டாக்டர் சி.ஆறுமுகம்,

சுவாச கோளாறுகள் சிறப்பு மருத்துவர், சென்னை.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us