தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/முட்டையை உரிக்க கொடுப்பதால் நிதானம் வரும்

முட்டையை உரிக்க கொடுப்பதால் நிதானம் வரும்

முட்டையை உரிக்க கொடுப்பதால் நிதானம் வரும்


PUBLISHED ON : டிச 05, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 05, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூளை அனுப்பும் சமிக்ஞைகளை, கையும் கண்ணும் ஒரே நேரத்தில் பெற்று, இணைந்து செயல்படுவதற்கு 'பைன் மோட்டார் ஸ்கில்' என்று பெயர். இந்த திறனை குழந்தைகளிடம் மேம்படுத்துவது மிகவும் அவசியம். இதற்கு பெற்றோர் செய்ய வேண்டியது, அவித்த முட்டையை குழந்தையிடம் கொடுத்து, அதன் ஓடை உரிக்கச் சொல்வது தான்.

அவித்த முட்டையின் ஓடை உரித்து விட்டு குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுப்பது தான் வழக்கம். அப்படி செய்யாமல், சூடு ஆறியதும், லேசாக தட்டி மெல்லிய கீறல் ஏற்பட்டதும், குழந்தையின் கையில் கொடுத்து உரிக்கச் சொல்ல வேண்டும். இது போன்ற செயலை செய்யும் போது, குழந்தைக்கு பொறுமை, நிதானம், அமைதி வரும். 'ஹைபர் ஆக்டிவ்' என்று சொல்லப்படும் துறுதுறுவென்று இருக்கும் குழந்தைகளின் நடவடிக்கையில் நிதானம் வரும். முட்டையை உரிக்க ஒரு முறை பழக்கினால் போதும். குழந்தைகள் உற்சாகமாக இதை செய்வார்கள்.

வேக வைத்த முட்டை ஓடை ரொம்ப பொறுமையாக உரிக்கும் போது, அவர்களின் பைன் மோட்டார் ஸ்கில் அதிகப்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. 2 - 5 வயது உள்ள குழந்தைகளுக்கு தினமும் ஒரு கோழி முட்டை சாப்பிடக் கொடுக்கலாம். இதைவிட புரதச் சத்து அதிகம் உள்ள காடை முட்டையும் தரலாம்.

எதுவாக இருந்தாலும் அவித்து, சூடு ஆறிய முட்டையை குழந்தையிடம் கொடுத்து, அவசரப் படுத்தாமல், நிதானமாக உரிக்கச் சொல்ல வேண்டும். என் இரண்டு குழந்தைகளையும் 1.5 வயதில் இருந்தே இதை செய்ய பழக்கி இருக்கிறேன். இப்படி செய்யும் போது, குழந்தையின் கையில் இருக்கும் சிறிய தசைகள், உள்ளங்கை, மணிக்கட்டு, கண்கள் இவை மூளையின் சமிக்ஞையை பெற்று இணைந்து செயல்படும்.

முதன்முறையாக பள்ளிக்கு செல்லும் குழந்தை, விரல்களின் நடுவில் பென்சிலை பிடித்து, நோட்டைப் பார்த்து, கற்றுத் தருவதை சரியாக எழுத வேண்டும். அதற்கு இந்த பயிற்சி மிகவும் உதவியாக இருக்கும்.



டாக்டர் ஆர். மைதிலி, ஆயுர்வேத மருத்துவர், உணவு, ஊட்டச்சத்து ஆலோசகர், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us