குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: தேவை தெரிந்தால் எடை குறையும்!
குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: தேவை தெரிந்தால் எடை குறையும்!
PUBLISHED ON : அக் 22, 2017

என்னுடைய அனுபவத்தில், நான் தெரிந்து கொண்ட விஷயம், நம் உடம்பிற்கு ஒத்துக் கொள்ளாத விஷயத்தை சாப்பிட்டால், எதிர்மறை விளைவுகள் ஏற்படும். எனக்கு, தானியத்தில் இருக்கும் புரதமான, குளூட்டன், லாக்டோஸ் இரண்டும் ஒத்துக் கொள்ளவில்லை.
இது தெரிந்து, இரண்டையும் சாப்பிடுவதை நிறுத்தியவுடன், உடம்பு உப்பியது போன்ற உணர்வு போய்விட்டது; மனநிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டது; தோலின் ஆரோக்கியம் அதிகரித்தது. என்ன செய்தாலும் போகாமல், ஒரு சிறிய தொப்பை இருக்குமே... அதுகூட சட்டென்று காணாமல் மறைந்து விட்டது. உணவைப் போலத்தான் உடற் பயிற்சியும். யோகாவாக இருக்கலாம், நடைபயிற்சி, ஜிம் என, எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நம் உடம்பின் தேவையைப் புரிந்து, அதற்கு ஏற்றதை செய்ய வேண்டும். நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், அதற்கான வழியை நாம் தான் கண்டுபிடிக்க வேண்டும். அது, நம் கையில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கவுதமி தாடிமல்லா
நடிகை, கேன்சர் விழிப்புணர்வு ஆர்வலர்

