குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: இரண்டுக்கும் ஆலோசனை அவசியம்!
குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: இரண்டுக்கும் ஆலோசனை அவசியம்!
PUBLISHED ON : பிப் 18, 2018

உடல் எடை கூடாமல் இருக்கவும் அல்லது குறைக்கவும் சரியான வழி, கொலைப் பட்டினி கிடப்பது அல்லது விரதம் இருப்பது தான் என்பது, தவறான, இயற்கைக்கு முரணான அபிப்ராயம்.
நம் உடலுக்கு, தன்னை பற்றிய மதிப்பீடு இருப்பதால், இது போன்ற முறைகளால், ஆரம்பத்தில் எடை கூடுவது போல தோன்றினாலும், உடல் தன்னைத் தானே பழைய எடைக்கு கொண்டு வந்து நிறுத்தி விடும்; இதை, 'பாடி இமேஜ்' என, மருத்துவர்கள் கூறுவர். ஆகையால், உடல் எடையைக் குறைக்க சிறந்த வழி, சமச்சீர் உணவு தானே தவிர, பட்டினி கிடப்பது அல்ல.
சிலருக்கு, 'பாடி இமேஜ்' என்ற மதிப்பீடு தவறாக ஆவதால், அவர்கள், தாங்கள் அதிக உடல் எடையுடன் இருப்பதாக கற்பனை செய்து, பயந்து, சாப்பாட்டையே தவிர்த்து விடுவர்; இதற்கு, 'அனோரெக்சியா நெர்வோசா' என, பெயர். இன்னும் சிலர், தாங்கள் சரியான உடல் எடையுடன் இல்லை என நினைத்து, சாப்பிட்டபடியே இருப்பர். இதற்கு, 'புலிமியா நெர்வோசா' என, பெயர். இரண்டுமே தவறு.
இந்த பிரச்னை இருப்பவர்கள், மனோதத்துவ டாக்டரின் ஆலோசனை பெற்று, உடல் எடையை சீராக வைக்கலாம்.

