sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

சிகரெட் புகை குழந்தைகளை பாதிக்கும்

/

சிகரெட் புகை குழந்தைகளை பாதிக்கும்

சிகரெட் புகை குழந்தைகளை பாதிக்கும்

சிகரெட் புகை குழந்தைகளை பாதிக்கும்


PUBLISHED ON : பிப் 11, 2018

Google News

PUBLISHED ON : பிப் 11, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகள் வளர்ச்சி எப்படி இருக்கும்?

பெண் கர்ப்பம் தரித்து 37 வாரத்திற்கு முன் குழந்தை பிறந்தால், அது சீக்கிரம் பிறந்ததாக அர்த்தம். அவர்களுக்கு மாதவிடாய் நின்றது முதல் 40 வாரத்திற்கு பின் குழந்தை பிறப்பது நல்லது. ரத்தப்போக்கு, கர்ப்பப்பையில் பிரச்னை, கர்ப்பப்பையில் 2 முதல் 4 குழந்தை வரை இருந்தால், கர்ப்பவாய் பாதிக்கும். இதில் தொற்று வந்தாலும், சர்க்கரை, ரத்த அழுத்தம், சிறுநீரகம், இருதய பாதிப்பு காரணமாகவும் பிரசவம் நடக்கும்.

கர்ப்பப்பையில் அதிக நாட்கள் குழந்தைகள் இருந்தால் மூளைவளர்ச்சி அதிகரிக்கும். குறை மாதத்தில் பிறந்தால் உடல் உள்ளுறுப்பு வளர்ச்சி குறையும். இருதயம், நுரையீரல், மூளை, குடலில் பிரச்னை ஏற்படலாம். நடப்பதற்கு சிரமம், கண் பார்வை மங்கும், காதுகேட்கும் தன்மை குறைவு இருந்தால் மூளை வளர்ச்சி குறைந்த குழந்தையாக இருக்கலாம்.

சிகரெட் புகை கருவில் உள்ள குழந்தையை பாதிக்குமா?

வீட்டிற்குள் சிகரெட் குடிப்பது, குடிப்பவரை மட்டுமின்றி குழந்தையையும் பாதிக்கும். புகையை நுகர்வதால் இருமல், ஆஸ்துமா வரும். பிற்காலத்தில் குழந்தைகளுக்கு புற்றுநோய், இருதய கோளாறும் வரும். கர்ப்பிணிகள் சிகரெட் புகையை நுகர்வதால் வயிற்றில் உள்ள குழந்தை வளர்ச்சி கூட பாதிக்கும். சிகரெட் குடிப்பவர்கள், அவர்களது உடலுக்காக மட்டுமின்றி, அவரது குடும்ப நன்மைக்காக சிகரெட் குடிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு தொண்டை வலி ஏற்பட காரணம் என்ன?

பாக்டீரியா, வைரஸ் கிருமியால் தொண்டை வலி ஏற்படும். சிலநேரம் 101 டிகிரி காய்ச்சல் வருதல், உணவு முழுங்க முடியாதது, வாயில் எச்சில் ஊருதல், மூச்சுதிணறல், கழுத்து நெறிகட்டும் பிரச்னை வந்தால் டாக்டரை அணுகவும். விளையாடும் பொருளை வாயில் வைப்பதன் மூலம் இக்கிருமிகள் உருவாகும்.

இதனால் மூக்கில் நீர் வருதல், கண் சிவத்தல், இருமல், தொண்டை கட்டுதல் அறிகுறி தென்படும். டாக்டரிடம் பரிசோதனை செய்வது நல்லது.

காய்ச்சல் பாதித்த குழந்தைக்கு என்ன உணவு தரலாம்?

காய்ச்சல் பாதித்த குழந்தைக்கு ஓய்வு அவசியம். அவர்களுக்கு எளிதில் செரிமானமாகும் இட்லி, இடியாப்பம் மற்றும் நீராகாரமான இளநீர், மோர், வெஜ்சூப் தரலாம். பாராசிட்டமல் மாத்திரை மற்றும் உப்புநீரை கொப்பளிக்க செய்யலாம். காய்ச்சல் குறைந்த பின்னரே பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தை கை, கால்களை சுத்தமாக கழுவினால், கிருமிகள் தாக்காது.

குழந்தை கீழே விழும்போது தலையில் அடிபட்டால், மூளைக்கு பாதிப்பு ஏற்படுமா?

குழந்தைகள் கீழே விழும்போது, தலை எலும்பு பாதிக்கலாம். இது தவிர கடுமையான காயம் ஏற்பட்டால், அடிபட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டு, மூளையில் ரத்தக்கசிவு, தலைவலி, வாந்தி வரலாம். இது தவிர காது, மூக்கில் ரத்தம் வருதல், வலிப்பு, மயக்கம் வந்தால் உடனே டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும்.

டாக்டர். முருகன் ஜெயராமன்

மதுரை, 90800 63459






      Dinamalar
      Follow us