sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

மனஅழுத்தமே காரணம்

/

மனஅழுத்தமே காரணம்

மனஅழுத்தமே காரணம்

மனஅழுத்தமே காரணம்


PUBLISHED ON : பிப் 11, 2018

Google News

PUBLISHED ON : பிப் 11, 2018


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* குளிர்காலத்தில் பல் வலி எடுத்தால் என்ன?

சிகிச்சை தட்பவெப்ப நிலையை ஏற்கும் திறன் பற்களுக்கு உண்டு. இவை 70 டிகிரி செல்சியஸ் உள்ள சூடான காபி, 1.5 டிகிரி செல்சியஸ் உள்ள குளிர்ந்த நீரை தாங்கும் சக்தி உண்டு. குளிர் காற்றில் நிற்கும் போதே குளிரில் வெளியே செல்லும்போது இந்த தட்பவெப்பம் மிக குறுகிய காலத்தில் வேகமாக மாறும். அப்போது பற்களின் மேல் ஒருவித அழுத்தம் ஏற்படும்.

நாளடைவில் இந்த அழுத்தம் பற்களுக்குள் கண்ணுக்கு தெரியாத அளவில் விரிசல்களை ஏற்படுத்தும். இவையே வலி மற்றும் கூச்சத்திற்கு காரணமாகும். இதை தடுக்க அந்த விரிசல்களை அடைக்கும் விதமாக பற்களின் மேல் 'சீலண்டஸ்' என்ற மருந்தை பூசவேண்டும். பல் மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான இடைவெளியில் இவற்றை சரி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

* தாடை எலும்பு தேய்ந்தவர்கள், நிலையான பற்களை கட்டமுடியுமா?

பற்களின் வேர்கள் தாடை எலும்பு தேயாமல் கெட்டியாக பிடித்திருக்கும். பற்கள் விழுந்தோ அல்லது அகற்றியோ இருந்தால், பற்கள் இல்லாத இடத்தில் எலும்பு மெதுவாக தேயஆரம்பிக்கும். நாளடைவில் பற்கள் இல்லாத இடத்தில் மட்டும் எலும்பு மிக குறைந்தளவே காணப்படும். அப்படி கட்டாமல் விட்டு எலும்பு தேய்ந்து போனவர்களும் நவீன சிகிச்சையில் நிலையான பற்களை கட்டலாம். முன்பெல்லாம் எலும்பு இல்லாவிட்டால் நிலையான பற்கள் கட்டமுடியாமல், பல் செட் கட்டி வந்தனர்.

தற்போது, 'கிராப்டிங்' சிகிச்சை மூலம் எலும்பு இல்லாத இடத்தில் செயற்கையாக எலும்பு உண்டாக்கலாம். அதற்கு பின் அவ்விடத்தில் நிலையான பல் கட்டுவது எளிது. செயற்கை எலும்பு வேண்டாம் என நினைப்போருக்கு அவரவர் தாடையில் இருந்தே, சிறிது எலும்பை எடுத்து வைக்கலாம். பல் கட்ட அரை அல்லது ஒரு கிராம் எலும்பு போதும். பெரிய அறுவை சிகிச்சையின்றி, நிலையான பற்கள் பெறலாம்.

* நம்மையும் அறியாமல் பற்களை அழுத்தமாக கடிப்பதால், பாதிப்பு வருமா?

பற்களுக்கு ஏற்படும் முக்கிய பிரச்னைகளில் இதுவும் ஒன்று. கம்ப்யூட்டர் பணி, அலுவலக ஆவணம் பார்த்தல், பிற வேலைப்பளுவால் சிந்தனை செய்யும் போது, நம்மில் பலருக்கு பற்களை கடிக்கும் பழக்கம் ஏற்படும். ஆரம்பத்தில் சாதாரணமாக இருக்கலாம். பின் அதுவே பற்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

பல் கடிப்போருக்கு பற்கள் அடைத்திருந்தால், அவை ஆங்காங்கே உடைந்து போயிருக்கும். பற்களில் அளவுக்கு அதிகமான தேய்மானம் ஏற்பட்டிருக்கும். பற்களின் பிடிமானமாக இருக்கும் ஈறுகள் கீழே இறங்கி இருக்கும். அடிக்கடி தலை வலி மற்றும் கழுத்து வலி ஏற்படும். இதில் ஏதாவது இருந்தால் நீங்கள் அதிகம் பல் கடிப்பவராக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். இதற்கு சிகிச்சை செய்வதோடு சேர்த்து இப்பழக்கத்தை கட்டுப்படுத்தவேண்டும். இதற்கு 'மவுத்கார்ட்' எனும் கருவி பொருத்தலாம். இதற்கேற்ப சிகிச்சை பெற்றால், பல் மற்றும் ஈறுகள் சீராக இருக்கும்.

டாக்டர். ஜெ.கண்ணபெருமான்

மதுரை, 94441 54551







      Dinamalar
      Follow us