தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: அறுபதுக்கு மேலும் ஆரோக்கியம்!

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: அறுபதுக்கு மேலும் ஆரோக்கியம்!

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: அறுபதுக்கு மேலும் ஆரோக்கியம்!


PUBLISHED ON : செப் 30, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 30, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வயது அறுவதை தாண்டும்போது, உடலுக்கு கலோரிகள் குறைவாகவே தேவைப்படும்; ஆனால், ஊட்டச்சத்து போதிய அளவு இருக்க வேண்டும். அதனால், கலோரி குறைவான, ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம்.

பழங்கள், காய்கறிகள், அரிசி, ஓட்ஸ், கோதுமை போன்ற முழு தானியங்கள், வைட்டமின் - டி, கால்ஷியம் நிறைந்த, கொழுப்பு நீக்கிய பால், பாலாடை, சோயா பால், மீன், முட்டை வெள்ளைக் கரு, வெள்ளரி, எள் போன்ற விதைகள் போதுமான அளவு சாப்பிடலாம்.

வெள்ளைச் சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட மாவில் செய்த பாஸ்தா, பிரட், மைதா போன்றவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

நண்பர்கள், குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது, நடைப் பயிற்சி, 'டிவி' முன் அமர்ந்து நேரத்தை வீணடிக்காமல் இருப்பது, தேவையான அளவு தண்ணீர் குடிப்பது, நல்ல துாக்கம் போன்றவை, 60 வயதிற்கு மேல் ஆரோக்கியமாக இருக்க வைக்கும். 'என்ன இருக்கு இனி, ஆசைப்படுறதை சாப்பிடணும்' என்ற மனநிலை இருக்கக் கூடாது.



சுபத்ரா சுந்தர்,

நியூட்ரிஷனிஸ்ட், கோவை.

subathraasundar@gmail.com


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us