PUBLISHED ON : ஜன 27, 2019

* எனது முழங்காலில் மூன்று ஆண்டுகளாக வலி உள்ளது. எனது மூட்டு தேய்மானம் ஆகி விட்டதாக மருத்துவர் கூறுகிறார். அது சரி செய்ய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்துள்ளார். அறுவை சிகிச்சை நுண் துளையில் செய்ய இயலுமா?
மூட்டு தேய்மானம் ஒரு பகுதியில் மட்டும் இருந்தால் தற்போதைய நவீன தொழில்நுட்பத்தில் 'கார்ட்டிலேஜ் கல்ச்சர்' முறையில் ஜவ்வு மாற்றும் சிகிச்சை நுண் துளை சிகிச்சை வழியாக செய்ய இயலும். கார்ட்டிலேஜ் கல்ச்சர் முறையில் முழங்காலில் உள்ள ஒரு துளி ஜவ்வினை 'பயாப்சி' எடுத்து அதை பரிசோதனை கூடத்தில் 48 மில்லியன் அணுக்கள் கொண்ட ஜவ்வாக மாற்றி அதை ஜவ்வு பழுதடைந்த இடத்தில் ஒட்டி விடலாம். இதனால் ஆரம்ப கட்ட நிலையில் உள்ளவர்களுக்கு நோய் மோசமாகாமல் பாதுகாக்க முடியும். மேலும் மூட்டு மாற்ற சிகிச்சையை தவிர்க்க முடியும்.
முழங்கால் வலி 6 ஆண்டுகளாக இருக்கிறது. எனக்கு மருத்துவர் மூட்டு மாற்று சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளார். இதை நுண் துளை வழியாக செய்ய இயலுமா?
மூட்டு மாற்று சிகிச்சையில் செயற்கை மூட்டு பொருத்தப்படுகிறது. இதை பொருத்துவதற்கு குறைந்த பட்சம் 10 செ.மீ.,க்குள் உள்ள அனைத்து திறந்த வெளி அறுவை சிகிச்சைகளும் 'மினி இன்வாசிவ் சர்ஜரி' என்று சொல்லப்படுகிறது. இதை மனதில் கொண்டு பார்த்தால் மூட்டு மாற்று 10 செ.மீ.,க்குள் உள்ள திறந்த அறுவை சிகிச்சையில் செய்ய முடியும். ஆனால் சாவித்துளை வழியாக மூட்டு மாற்று சிகிச்சை உலகில் எங்கும் சாத்தியமில்லை. ஏனெனில் செயற்கை மூட்டு பொருத்த குறைந்த பட்சம் 10 செ.மீ., தேவைப்படும்.
* எனது தாய்க்கு 74 வயது. எலும்புகள் அனைத்தும் வலுவின்றி இருக்கிறார். 'டெக்ஸா ஸ்கேன்' எடுத்ததில் 'ஆஸ்ட்டியோபோரேசிஸ்' இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவருக்கு 'ஸொலன்ரோனிக் அசிட்' என்கிற ஊசி ஆண்டுக்கு ஒருமுறை கொடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தின் விலை அதிகம் மற்றுமு் ரத்த நாளத்தில் செலுத்தக்கூடிய மருந்தாகும். இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த மருந்தை தள்ளாத வயதில் கொடுப்பது நல்லதா?
ஸொலன்ரோனிக் அசிட் என்கிற ஊசி நம் எலும்பில் உள்ள அடர்த்தி குறைவதை தடுப்பதற்காக கொடுக்கப்படுகிறது. இதை செலுத்தும்போது பரிந்துறைக்கப்படும் சான்றிதழை படித்து அதில் கூறிய படி செலுத்தப்பட வேண்டும். சரியாக செலுத்தப்பட்டால் எந்த வயதிலும் இது பாதுகாப்பான சிகிச்சை முறையே. மாற்று மருந்துகளான மாதம் ஒருமுறை எடுக்கும் மாத்திரைகளும் உள்ளன. மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.
- டாக்டர் கே.என். சுப்ரமணியன்
எலும்பு மூட்டு ஆறுவை சிகிச்சை நிபுணர், மதுரை
93442 46436
