தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பெண்களை பாதிக்கும் மார்பக புற்றுநோய்

பெண்களை பாதிக்கும் மார்பக புற்றுநோய்

பெண்களை பாதிக்கும் மார்பக புற்றுநோய்


PUBLISHED ON : ஜூன் 17, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 17, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மார்பகப் புற்றுநோய், இந்தியாவில் பெண்களிடம் கருப்பை புற்றுநோய்க்கு அடுத்தபடியாக, அதிகமாக காணப்படுகிறது. கடந்த, 2001ம் ஆண்டு இந்தியாவில் மொத்த பெண்களின் எண்ணிக்கையில், ஐந்து கோடி பெண்களில், 80 ஆயிரம் பேர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பர் என, கணக்கிடப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும், ஒரு லட்சம் பெண்களில், 21 பேருக்கு மார்பக புற்றுநோய் உள்ளது என, அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவன புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

மார்பக புற்றுநோயின் அறிகுறிகள்:

* மார்பகத்தில் கட்டி அல்லது அக்குளில் நெரிக்கட்டு ஏற்படுதல்

* மார்பக அமைப்பில் ஏற்படும் மாற்றம்

* மார்பக காம்புகளிலிருந்து ரத்த கசிவு ஏற்படுதல்

* மார்பக காம்புகள் உள்ளிழுத்துக் கொள்ளுதல்

* மார்பகத் தோலில் ஏற்படும் சுருக்கம்

மார்பக புற்றுநோய் ஏற்பட காரணங்கள்:

* சிறுவயதிலேயே பருவமடைதல் அல்லது மாதவிடாய் நிற்பதில் ஏற்படும் தாமதம்

* தாமதமாக குழந்தை பெற்று கொள்ளுதல்

* குடும்பத்தில், உறவினர்களுக்கு மார்பகப் புற்றுநோய் கண்டிருத்தல்

காத்துக் கொள்ள வழிகள்:

* கொழுப்பு சத்து மிகுந்த உணவை தவிர்க்க வேண்டும்

* உடல் பருமன், அதிக எடையை தவிர்க்க வேண்டும்

* மாதவிடாயை மாற்றக்கூடிய மாத்திரைகளை அதிகமாக பயன்படுத்தக் கூடாது

* நெருங்கிய உறவினர்கள் எவரேனும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்களும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்

மேற்கூறிய அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், உடனே மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனையின் பேரில், மார்பகத்தில் உள்ள கட்டி, புற்றுநோய் கட்டியா, சாதாரண கட்டியா என்பதை அறிந்து, தக்க சிகிச்சையை பெறலாம்.

- து.ஜெயக்குமார்,

புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்,

அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை, காஞ்சிபுரம்.

98402 56144

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us