தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/குழந்தையின் முதல் தடுப்பு மருந்து தாய்ப்பால்!

குழந்தையின் முதல் தடுப்பு மருந்து தாய்ப்பால்!

குழந்தையின் முதல் தடுப்பு மருந்து தாய்ப்பால்!


PUBLISHED ON : ஆக 12, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 12, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இருபது சதவீத குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறக்கின்றன; இவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதைத் தவிர்க்க, குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடும் போதே, அம்மை, ரூபெல்லா போன்ற தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வது, கர்ப்ப காலத்தில் நோய் தொற்றைத் தடுக்கும்.

கர்ப்ப காலத்தில் கால்சியம், இரும்புச் சத்து, புரதம் நிறைந்த உணவை சாப்பிட வேண்டும். மன அழுத்தம், பதற்றம் இல்லாமல், 'ரிலாக்சாக' இருக்க வேண்டியது அவசியம். குழந்தை பிறந்தவுடன் சுரக்கும், 'கொலஸ்ட்ரம்' எனப்படும் சீம்பாலில், அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.

தற்போது அதிக அளவில் 'சிசேரியன்' அறுவை சிகிச்சை மூலமே குழந்தை பெறுவதால், குழந்தை பெற்ற அரை மணி நேரத்திற்குள் சீம்பால் தருவதில் கவனம் செலுத்துவதில்லை. சிசேரியன் செய்தாலும், அரை மணி நேரத்திற்குள் சீம்பாலை குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.

வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் சீம்பாலில் பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. மிகச் சிறந்த தடுப்பூசி என்றாலே இது தான். குறிப்பிட்ட நேரத்திற்குள் தந்தால், குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கும்.

அறுவை சிகிச்சை செய்வதால் ஏற்படும் மன அழுத்தம், வலி போன்றவற்றால், சீம்பாலை தராமல் புட்டிப் பாலை முதலில் கொடுத்து விடுகின்றனர். முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குழந்தைகளுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும்.

கிருமி தாக்குதலில் இருந்து பாதுகாப்பு தருவது மட்டுமல்ல, அலர்ஜி, ஆஸ்துமா, தோல் வியாதி, மூச்சிரைப்பு போன்ற பிரச்னைகள் வருவதும் குறையும்; கேன்சர் பாதிப்பு வருவதில் இருந்தும் பாதுகாப்பு தரும்; குழந்தையின் அறிவாற்றல், மற்ற குழந்தைகளைக் காட்டிலும் 5 - 10 மடங்கு வரை அதிகம் இருக்கும்.

டாக்டர் தீபா ஹரிஹரன்,

பச்சிளங் குழந்தைகள் சிறப்பு மருத்துவர்,

சென்னை

98410 71435


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us