தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மூச்சு விட உதவிடும் இன்கேலர்

மூச்சு விட உதவிடும் இன்கேலர்

மூச்சு விட உதவிடும் இன்கேலர்


PUBLISHED ON : ஜன 20, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 20, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* என் உறவினர் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தினமும் சோடியம், பொட்டாசியம் பரிசோதனை செய்ய வேண்டும் என்று ரத்தம் எடுத்துக் கொண்டே இருந்தனர். இது அவசியம் தானா

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் மிக மோசமான நிலையில் இருப்பார் அல்லது அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தி இருப்பர். இவ்வாறு உள்ளவர்களின் உடல் நிலை ஒரே சீராக இருக்காது. அவர்களுடைய 'யூரியா கிரியேடினின்' சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற அளவுகளில் நிமிடத்திற்கு நிமிடம் வேறுபாடு இருந்து கொண்டே இருக்கும்.

அதன் அளவை வைத்துத் தான் மருத்துவர் அவருக்கு சிகிச்சை அளிப்பார். இதனை கவனிக்காமல் சிகிச்சை அளித்தால் அது நோயாளியின் உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும். எனவே, இந்த பரிசோதனைகள் எடுப்பது முக்கியமானதாகும்.

* என் தங்கைக்கு தொண்டையில் தைராய்டில் புற்று நோய் இருந்து, அதை அறுவை சிகிச்சை செய்து ரேடியோதெரபி கொடுத்தனர். மூச்சுக்குழாய் சுருங்கி விட்டது. என்ன செய்யலாம்?

அறுவை சிகிச்சை செய்து ரேடியோதெரபி கொடுக்கும் போது ஒரு சில சமயங்களில் இதைப்போல் டிராசியா என்ற மூச்சுக்குழாய் சுருங்கி விடும். இதை இரண்டு வழிகளில் சரி செய்யலாம். மூச்சுக் குழாய் இன்னொன்று அதற்கு பதிலாக பொருத்தலாம் அல்லது ஸ்டென்ட் வைத்துக் கொள்ளலாம். இந்த இரண்டில் எதை செய்யலாம் என்று அவரவர் உடல் நிலைக்கு தகுந்தாற் போல் மருத்துவர் முடிவு செய்வார்.

* என் குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு மருத்துவரை அணுகிய போது அவர் வீட்டில் நெபுலைசர் தொடர்ந்து வைக்குமாறு கூறினார். இது சரியா?

பொதுவாக நுரையீரல் பிரச்னை உள்ளவர்கள் நெபுலைசர் வைப்பதை விட இன்கேலர் எடுப்பதே சிறந்ததாகும். எடுத்து அது மூச்சு விடுவதை கட்டுப் படுத்தாமல் இருந்தால் மட்டுமே நெபுலைசேஷன் அறிவுரைக்கப்படுகிறது.

ஒரு சிலருக்கு இன்கேலர் எவ்வளவு எடுத்தாலும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்து கொண்டே இருக்கும். அவ்வாறு உள்ளவர்களுக்கு நெபுலைசர் வைக்கப்படுகிறது. வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் இன்கேலரை உள்ளிழுக்க முடியாதவர்கள் போன்றவர்களுக்கு நெபுலைசர் வீட்டில் எடுக்க பரிந்துரைக்கப் படுகிறது. 99 சதவீதம் மக்களுக்கு இன்கேலர் அறிவுரை செய்யப்படுகிறது.

- டாக்டர் மா. பழனியப்பன்,

நுரையீரல் சிறப்பு நிபுணர், மதுரை.

94425 24147


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us