தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ஆவி பிடிப்பது நுரையீரலுக்கு ஆரோக்கியம்!

ஆவி பிடிப்பது நுரையீரலுக்கு ஆரோக்கியம்!

ஆவி பிடிப்பது நுரையீரலுக்கு ஆரோக்கியம்!


PUBLISHED ON : மே 13, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 13, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வைரஸ் தொற்று வந்து விட்டால், என்ன தான் மருத்துவ கண்காணிப்பு, மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டாலும், ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க வேண்டும் என்றால், நாம் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.

தொற்று வந்துவிட்டால், உடலளவில் நிறைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பது உண்மை தான். ஆனாலும், சில நடைமுறைகளை செய்து தான் ஆக வேண்டும்.

காலை எழுந்ததும், முதல் வேலையாக பிராணாயாமம் செய்ய வேண்டியது கட்டாயம். முறைகேடாக மூச்சு பயிற்சி செய்ய முடியாவிட்டாலும், குப்புறப்படுத்து, சுவாசத்தை வலுக்கட்டாயமாக உள்ளிழுத்து வெளியே விட்டால் போதும்; நுரையீரலின் வலிமை அதிகரிக்கும்.

புரதச் சத்து அதிகம் உள்ள உணவுகளை அதிக அளவில் சாப்பிட வேண்டும். குளிர்ச்சியான பானங்களை தவிர்த்து, வெந்நீர் குடிக்க வேண்டும். வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே, தினமும் கஷாயம் காய்ச்சி குடிக்கலாம்.

இஞ்சி, அதிமதுரம், அஸ்வகந்தா, பட்டை, அன்னாசி பூ, சீரகம், மிளகு, கருஞ்சீரகம், மஞ்சள், வெற்றிலை, கற்பூரவள்ளி இலை இவற்றில், தலா, ஒன்றிரண்டை போட்டு, இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பாதியாக வற்றியதும், அவ்வப்போது குடிக்க வேண்டும்.

டாக்டர் என்.தீபா

சென்னை


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us