PUBLISHED ON : மே 18, 2014

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வி.வீரராகவன், கூடுவாஞ்சேரி, காஞ்சிபுரம்: எனக்கு வயது, 79. இரண்டு ஆண்டுகளாக, என்னுடைய ரத்த யூரியா-35; கிரியாட்டின், 2.5 ஆக இருந்தது. டாக்டர் இது ஒன்றும் பிரச்னை இல்லை என்றும், உணவு கட்டுப்பாடு குறித்தும் கூறினார். 'ஆன்டிபயாடிக்', வலி மாத்திரைகள், டெரிபிலின் போன்ற மாத்திரைகள் கூடாது என்கிறார். இந்த மருந்துகள் தேவைப்படும் அளவுக்கு நோய் வந்தால் என்ன செய்வது?
உங்கள் டாக்டர் சொன்னபடி, இரண்டு அளவுகளும் இயல்பு நிலையில்தான் உள்ளன; அதனால் எந்த பிரச்னையும் இல்லை. பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப, டாக்டரின் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்ளலாம். இந்த காலத்தில், லேசான தலைவலி என்றாலும் பெட்டிக்கடைகளில் வாங்கி மாத்திரை போடுவதை வழக்கமாக வைத்து உள்ளனர். இதுபோன்று செய்வது சரியல்லை.

