PUBLISHED ON : ஏப் 08, 2012

Trans Fats நமது உடலை எவ்விதமாக பாதிக்கிறது? சிவசுப்ரமணியன், மதுரை
Trans Fats என்பது Trans Fatty Acids என்பதாகும். இது திரும்பத் திரும்ப எண்ணெ#யை கொதிக்க வைப்பதால், வேறுவகை ஊச்ttதூ அஞிடிஞீண்ல் இருந்து உருவாகும் கொழுப்புச் சத்து. தெருவோர கடைகளில் இது அதிகமாக உள்ளது. இது Saturated Fat ஐவிட கொடூரமானது. இதனால் சர்க்கரை நோய், இருதய வியாதி நேரடியாக ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி எல்.டி.எல்., என்னும் கெட்ட கொழுப்பை கூட்டுவதுடன், எச்.டி.எல்., என்னும் நல்ல கொழுப்பின் அளவை குறைக்கிறது. ஆகவே எண்ணெ# யில் பொரித்த உணவை தவிர்ப்பது நல்லது. அவசியம் ஏற்பட்டால்கூட, ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மறுமுறை பயன்படுத்தவே கூடாது.
சர்க்கரை அளவு குறைவது இருதய நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா? பி.சீத்தாராமன், திண்டுக்கல்
தற்போதுள்ள நவீன மருத்துவ வழிகாட்டுதல்படி, சர்க்கரை நோயுள்ள இருதய நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் குறைந்தால் அது பல வழி களில் இருதயத்தை பாதிப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக முதியவர்களுக்கு, இருதய நோய் உள்ளவர்களுக்கு வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை அளவு 120 மி.கி., சாப்பிட்டு 2 மணி நேரத்திற்கு பின் 180 மி.கி., என்ற அளவில் இருந்தால் போதுமானது. இதற்கு கீழே குறைந்தால் அது நேரடியாக இருதயத்தை பாதிக்கிறது. ரத்தத்தில் ஏஞஅ1ஞி 7.0 என்ற அளவில் இருந்தால் போதுமானது. எனவே இருதய நோய் உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை மிகவும் குறைவதை அவசியம் தவிர்த்தாக வேண்டும்.
ரத்தக் கொதிப்பு உள்ளவர் களுக்கு ஞாபக சக்தி குறைதல் வர வாய்ப்பு உள்ளதா? ஙு ஆர். மஞ்சுநாதன், தேனி
ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு ஞாபக சக்தி குறைதல் தன்மை வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ரத்த அழுத்தம் கூடக் கூட அது மூளையில் உள்ள ரத்தக் குழாய்களை பாதிக்கிறது. இதனால் மூளையில் உள்ள 'ஒயிட் மேட்டர்' என்ற பகுதியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி மூளையின் அளவும் சிறிது சுருங்க வாய்ப்புள்ளது. ஏனெனில் மூளைக்குச் செல்லும்
ரத்தஓட்டமும் ரத்தக் கொதிப்பால் பாதிக்கிறது. எனவே ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் எந்த தருணத்திலும் 140/90க்கு கீழ், 120/80 என்ற அளவில் வாழ்வியல் மாற்றங்களாலும், மருந்து எடுத்தும் சரியான அளவில் வைத்துக் கொள்வது
அவசியம்.
எனது வயது 41. மூன்று மாதங்களாக ரத்தக்கொதிப்பு உள்ளது. எனது டாக்டர், Oடூட்ஞுண்ச்ணூtச்ண 40மி.கி., மாத்திரை தந்துள்ளார். இதை நான் தொடர்ந்து எடுக்கலாமா? பி. குமாரசாமி, ராமநாதபுரம்
Oடூட்ஞுண்ச்ணூtச்ண என்பது அ கீ ஆ என்ற மருந்து வகையை சேர்ந்தது. இது சமீபத்தில் வந்துள்ள ரத்தக்கொதிப்பு மருந்து ஆகும். இது ரத்தக்கொதிப்பின் அளவை நன்கு குறைக்கிறது. அதுமட்டுமின்றி பக்கவிளைவும் மிகவும் குறைவானது. உங்கள் வயதில் எடுக்க வேண்டிய மிகநல்ல மருந்தாகும். எனவே நீங்கள் தாராளமாக இம்மருந்தை எடுத்துக் கொள்ளலாம்.
- டாக்டர் சி.விவேக்போஸ்
மதுரை
