sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

வாயில் புண் ஏற்படுவதை எளிதில் தடுக்கலாம்

/

வாயில் புண் ஏற்படுவதை எளிதில் தடுக்கலாம்

வாயில் புண் ஏற்படுவதை எளிதில் தடுக்கலாம்

வாயில் புண் ஏற்படுவதை எளிதில் தடுக்கலாம்


PUBLISHED ON : ஜூன் 20, 2010

Google News

PUBLISHED ON : ஜூன் 20, 2010


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உணவை நன்றாக மென்று சாப்பிடவேண்டும். மொத்த மக்கள் தொகையில், எப்போதும் 20சதவீதத்தினர் வாயில் புண் ஏற்பட்டு, உணவை சுவைக்க முடியாமல்அவதிப்படுகின்றனர். பெண்கள் பருவவயதை எட்டும் போது இந்த பாதிப்பைஉணர்கின்றனர். சிலருக்கு, வாழ்நாள்முழுவதும் இது தொடர்கதையாகிவிடுகிறது.

சில குடும்பங்களில், இந்த பாதிப்பு பாரம்பரியமாக தொடர்கிறது. திடீரென விட்டு, விட்டு புண் வரும். 10 மி.மீ.,அளவு வரை, மூன்று புண்கள் ஏற்படுவது வாடிக்கை. வாயில்,"மியூகோசா' என்ற கொழகொழப்புசுரப்பிக்கு மிக நெருக்கமாக நரம்புகள்செல்வதால், வாயில் புண் ஏற்படும்போது வலி அதிகமாக தெரிகிறது.இரண்டு, மூன்று வாரங்களில் இந்தபுண்கள் தானாகவே ஆறிவிடுகின்றன.வடுக்களும் ஏற்படாது. வாயில் புண்ஏற்பட ஒரே காரணம் கிடையாது.படபடப்பு, ஆன்ட்டிபயாடிக்சாப்பிடுவது, ஹார்மோன் மாற்றங்கள்,பலவீனம் ஆகியவை காரணமாகஇருக்கலாம்.

ஹெர்ப்ஸ் வைரஸ், காக்சாக்கி, சைட்டோமெகாலோ வைரஸ், ஹெப்பாடைட்டிஸ் சி ஆகியவையால்வாயில் அடிக்கடி புண் ஏற்படும்.ஹெர்ப்ஸ் வைரஸ், வாயில் நிறையபுண்களை ஏற்படுத் தும்.குழந்தைகளிடையே இந்த பாதிப்புஅதிகம் தெரியும். பெரியவர்களிடையேநீரிழிவு நோயாளிகள், கேன்சர்நோயாளிகள், எச்.ஐ.வி., தொற்றுஉடையோர், நோய் எதிர்ப்பு திகுறைந்தோருக்கு இது போன்றுஏற்படலாம். "அøலோவிர்' மருந்துஉட்கொண்டால் இது சரியாகும்.

சிலருக்கு, வாயின் வெளியில்உதட்டருகே, கொத்து கொத்தாக நீர் கொப்புளங்கள் ஏற்படும்.குழந்தைகளுக்கு ஜுரம் ஏற்படும் போதுஇது தோன்றலாம். சில நேரங்களில் வாய் முழுவதும்சிவந்து, கன்னத்தின் உள் பக்கத் தில்தயிர் போன்ற திட்டுக்கள் தோன் றும். இது தொற்றால் ஏற்படுகிறது. குழந்தைகளின் பால் பாட்டிலை, தினமும் சுத்தமாக கழுவி பால்கொடுத்தாலும், இது போன்று புண்ஏற்படும். வெறும் "நிப்பிளை' குழந்தைவாயில் வைக்கும் பழக்கம் இருந்தாலும்புண் ஏற்படும்.

இது போன்ற பாதிப்பு உள்ள குழந்தைகள், உணவை விழுங்க சிரமப்படும். சாப்பிட மறுக்கும். கட்டுப்படுத்தாத நீரிழிவு நோய், தொடர்ந்து ஆன்ட்டிபயாடிக் மருந்துசாப்பிடுதல், புற்றுநோய்க்கான சிகிச்சைஎடுத்து கொள்பவர்கள் ஆகியோருக்குவாயில் இது போன்று புண் ஏற்படும்.எச்.ஐ.வி., தொற்று உள்ளவர்களுக்கு,இந்த புண்ணை ஒரு அறிகுறியாகஎடுத்து கொள்ளலாம்.

"மியூகோசா' தொடர்ந்து பாதிக்கப்பட்டால் தான் இது போன்றுபுண்கள் ஏற்படுகின்றன. வாயில்பற்கள் தாறுமாறாகவளர்ந்துள்ளவர்களுக்கு இது போன்றுபாதிப்புகள் அதிகம் ஏற்படும். பல் மற்றும் ஈறை சுத்தமாக வைத்துகொள்ளாதவர்களும், பல் காரைபடிந்துள்ளவர்களும் இந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

தினமும் இரண்டு வேளை பல் சுத்தம்செய்ய வேண்டும். பல் காரைபடிந்துவிட்டால், எவ்வளவு "பிரஷ்'செய்தாலும் அது போகாது.காரைகளுக்கும், பல்லுக்கும் இடையேஉள்ள இடுக்குகளில் பாக்டீரியாக்கள்வாசம் செய்ய துவங்கி, பல்லில்அடிக்கடி புண் ஏற்பட்டு வாய்துர்நாற்றம் உருவாகும்.

சிக்கன் 65, காலிபிளவர் 65 போன்றஉணவுகளில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறமளிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தரமற்றதாக இருந்தால், வாயில்ஒவ்வாமையை உருவாக்கி, "மியூகோசா'வை பதம் பார்த்து புண்ஏற்படுத்தி விடும்.புகையிலை சுவைத்தல், புகைபிடித்தல், பான், குட்கா, பான் பராக்சுவைத்தல் ஆகியவை வாயின் மேற்பரப்பில் உள்ள திசுக்களை அழிக்கின்றன. இதனால் வாய்க்கு நிறம் கொடுக்கும் நிறமிகள் அழித்து, வெள்ளை படைஉருவாகும். இது, புற்றுநோயின்ஆரம்ப அறிகுறியாக கருதப்படுகிறது."பயாப்சி' பரிசோதனை செய்து சிகிச்சைபெற வேண்டும்."அல்சரேட்டிவ் காலிடிஸ்' என்றவகை வாய்ப்புண், நோய் எதிர்ப்புதியை குறைத்து, தீவிரவாய்ப்புண்ணை ஏற்படுத்தும்.

இரும்புச் சத்து, துத்தநாகச் சத்து, வைட்டமின் பி குரூப் வகைகள் ஆகியவற்றின் குறைபாடு, வாயில்சிவப்பு திட்டுக்களை உருவாக்கி, நாக்கில் அதிக வழவழப்பை ஏற்படுத்தி, உதட்டை வீங்க செய்து விடும்.

"மியூகோசா' மிகவும் மெலிந்து விடும்.இதனால் புண் அதிகரிக்கும்.

வாயில் புண் ஏற்பட்டால்

*உணவு சாப்பிடுவதற்கு முன் ஐஸ்கட்டியை சுவைத்தால் வலி ஏற்படாது.

*வலியை குறைக்கும் வாய் களிம்புகளை பயன்படுத்தலாம்.

* டாக்டர் பரிந்துரைத்தால் வாயில்ஸ்டிராய்டு பூசலாம். ஆனால், தொற்றுஉள்ள வாயில் இது புண்ணைஅதிகரித்து விடும்.

*"அசைக்லோவிர்' மாத்திரையை, டாக்டர் ஆலோசனையின் பேரில் சாப்பிட்டால் புண்ணின் தீவிரம் குறையும்.எந்த புண்ணுமே இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால், "பயாப்சி' பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.

தொடரும்..

டாக்டர். கீதா மத்தாய்,வேலூர்.

தொடர்பு கொள்ள: yourhealthgm @yahoo.co.in



புண் ஏற்படாமல் தடுக்க

*தினமும் இரண்டு வேளை"பிரஷ்' செய்ய வேண்டும்.

* தினமும், காலை வெறும்வயிற்றில் 60 மி.லி., அளவு தயிர்சாப்பிடுங்கள். நோய் எதிர்ப்பு திறன்குறைந்து போய் வாயில் புண்ஏற்படுபவர்கள், இது போன்று தயிர் சாப்பிட்டால் புண் ஏற்படுவதை தடுக்கலாம்.

*வைட்டமின், தாதுப்பொருட்கள் அடங்கிய உணவு வகைகள், பச்சைகாய்கறிகள், பழங்கள், முளைகட்டிய பயிறு கலவைகள் சாப்பிட்டால் வாயில் புண் ஏற்படாது.

* குறிப்பிட்ட வைட்டமின் சத்துகுறைபாடு உங்களுக்குஏற்பட்டுள்ளதென தெரிந்தால், அதற்கான வைட்டமின் மாத்திரை சாப்பிடலாம்.

* "குளோரெக்சிடைன், போவிடோன் அயோடின் மற்றும் சிலஆன்ட்டிசெப்டிக் "மவுத்வாஷ்'களைபயன்படுத்தி, வாயை சுத்தம்செய்யலாம்.

* நிறமூட்டிகள் கொண்ட உணவு வகைகள் உண்பதை தவிர்க்கவும்.

* குழந்தைகளுக்கு பீடிங்பாட்டில், நிப்பிள் ஆகியவற்றைஅடிக்கடி பயன்படுத்தாதீர்கள்.

படபடப்பு குறைந்தாலே வாயில்புண் மறைந்து விடும். தினமும் 40நிமிட உடற்பயிற்சி, தியானம், யோகா செய்தால் நோய்கள் அண்டாது.








      Dinamalar
      Follow us