PUBLISHED ON : ஜூன் 20, 2010

பருவுக்கும், உணவு பழக்கத்துக்கும் சம்பந்தமில்லே!
சுசிலா, சேலையூர், சென்னை
கடந்த 4 ஆண்டுகளாக உடல் முழுவதும் அடிக்கடி சூடுகட்டி வருகிறது. பாட்டிவைத்தியமும், ஆங்கில மருத்துவமும் பார்த்து வருகிறேன். அந்த நேரத்தில் சரியானாலும் பூரண குணமில்லை. கட்டி வருவதற்கும், சர்க்கரை
வியாதிக்கும் சம்பந்தம் உள்ளதா? ரத்தபரிசோதனை செய்ய வேண்டுமா? இதற்குஎத்தகைய மருத்துவரை அணுக வேண்டும்? உடல் வெப்பத்தினாலோ, தூய்மையற்றரத்தத்தினாலோ, கெட்ட நீராலோ வருகிறதா?
நீரிழிவு நோயின் உலக தலைநகராக இந்தியா விளங்குகிறது. நீரிழிவு ஏற்பட்டிருக்குமோ எனசந்தேகம் தோன்றினால், உணவுக்கு முன், உணவு உண்டு இரண்டு மணி நேரத்திற்கு பின் என,இரண்டு முறை ரத்த பரிசோதனைமேற்கொள்ளுங் கள். தோராயமான பரிசோதனை துல்லிய கணிப்பை தராது.
இந்த ஆண்டு கோடை, மிகவும் உஷ்ணமாக உள்ளது. முன்னெச்சரிக்கை இல்லையெனில்,வியர்க்குரு அதிகம் தோன்றும்.
* "நீகோ' சோப்பு போட்டு, தினமும் இரண்டுவேளை குளிக்க வேண்டும்.
* சோப்பை உடலில் நேரடியாகபோடாதீர்கள்.
* பீர்க்கங்காய் அல்லது பிளாஸ்டிக் நார்பயன்படுத்தி சோப்பை உபயோகப்படுத்துங்கள்.
* பருத்தி, லினென் அல்லது இயற்கை இழையால் ஆன ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள்.
* தினமும் உடை மாற்றவேண்டும்.
* டால்கம் பவுடர் உபயோகப்படுத்தாதீர்கள்.சருமத்தில் உள்ள அழுக்கு,வியர்வையை வெளியேற்றி, சருமத் துளைகளை, சோப்புசுத்தமாக்குகிறது. டால்கம்பவுடர்கள் பயன்படுத்தினால், அவைதுளைகளில் தங்கி விடும். வியர்வையுடன் இதுசேரும்போது, துளைகளில் பாக்டீரியா வளரும்.சீழ்க்கட்டிகள் உருவாகும்.
ஜெ. கஜேந்திரன், படப்பை, சென்னை:
எனக்கு மலம் போகும் வழியில் சிறிய பூச்சி இருப்பதாக உணர்கிறேன். நமைச்சலாக உள்ளது. கையில் தென்படுகிறது. பூச்சிமாத்திரை சாப்பிட்டு பார்த்தும் சரியாகவில்லை.இதற்கு வழிசொல்லுங்கள்.
கொக்கிப்புழுக்களால், மலம் வெளியேறும் இடத்தில் அரிப்பு ஏற்பட்டாலும், அதற்குகொக்கிப் புழுக்கள் மட்டுமே காரணமென சொல்ல முடியாது. பூஞ்சை மற்றும் ஈஸ்ட்தொற்று, ஆன்ட்டிபயாடிக் உண்பது, மலத்தை சரியாக சுத்தம் செய்யாமல் இருத்தல், மூலநோய், வியர்வை, நீரிழிவு நோய், சொரியாசிஸ்,தோல் நோய் ஆகியவற்றால் அரிப்பு ஏற்படலாம்.ஆண்களிடம் இந்த அரிப்பு அதிகம்காணப்படுகிறது. மருத்துவர் தான் இதைகண்டுபிடிக்க வேண்டும். சிகிச்சை அளித்தால்குணமாகும்."அல்பெண்டிசோல்' மாத்திரையை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிடுவது, புழுக்களை கட்டுப்படுத்தும்.
மாத்திரைசாப்பிட்ட அன்றே, பெட்ஷீட், டவல்கள், தலையணை உறைகளை மாற்றுவது நல்லது. மலம் வெளியேறும் இடத்தை பேபி சோப்போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். அகலபாத்திரத்தில், பொறுக்கும் அளவிலான சுடுநீர் ஊற்றி, 10 நிமிடம் அதில் அமர்வது, அரிப்பை கட்டுப்படுத்தும். மிகவும் இறுக்கமானஉள்ளாடை அணிவதை தவிர்க்கவும்.
பத்மலோசனி, செங்கல்பட்டு
என் கன்னத்தில் நிறைய பருக்கள் இருந்தன.தோல் நோய் சிகிச்சை நிபுணரிடம் சிகிச்சைபெற்றதில், பருக்கள் மறைந்து விட்டன.ஆனால், கரும்புள்ளிகள், தழும்புகள் உள்ளன. இதற்கு தனி, "பேஸ் பேக்' உள்ளதா? மேலும்பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியுமா?
சிகிச்சையின் மூலம்பருக்கள் காணாமல்போனதே, 75 சதவீத பிரச்னை தீர்ந்தது எனக்கொள்ளலாம்.பருக்களால் ஏற்பட்டகரும் புள்ளிகள், தழும்புகள்ஏற்பட்டதற்கான காரணம், முகத்தில் உள்ளநுண்ணிய துளைகளில் சில பெரிதாகஇருந்திருக்கலாம். வியர்வை, உடலில் சுரக்கும் மெழுகு, தூசி ஆகியவை இதில்சேரும். மென்மையான "பேஸ் வாஷ்' மூலம் முகத்தை சுத்தம் செய்து கொள்ளுங்கள்;சோப்பு பயன்படுத்த வேண்டாம். இப்பிரச்னையை தீர்க்க, பென் சாய்ல்பெராக்சைடு, டிரெடினாய்ன், ஐசோடிரெடினாய்ன் மற்றும் சில ஆன்டிபயாடிக்களிம்புகள் உள்ளன. தினமும் இரவு நேரங்களில் இந்த களிம்புகளை முகத்தில் பூசலாம்.
பகலில் வேண்டாம்; முகம் கறுத்து விடும்.மகப்பேறு அடையும் எண்ணம் உள்ளோர்,அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக, இந்தகளிம்புகளை பயன்படுத்துவதை நிறுத்தவேண் டும். சரும நல மருத்துவரிடமும் காண்பிக்கலாம். கரும்புள்ளிகளை அவர் கருவியால் நீக்கி விடுவார். வேறு சிலசிகிச்சைகளும் உள்ளன. முழுவதும் குணம் பெறசில மாதங்கள் ஆகலாம். நீங்கள் உண்ணும் உணவுக்கும், பருக்களுக்கும் தொடர்பு இல்லை. ஹார்மோன்மாறுபாடே, பரு ஏற்படக் காரணம்.

