sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

மூலிகை கட்டுரை

/

மூலிகை கட்டுரை

மூலிகை கட்டுரை

மூலிகை கட்டுரை


PUBLISHED ON : ஜூன் 20, 2010

Google News

PUBLISHED ON : ஜூன் 20, 2010


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூங்காத மனம் உண்டா

நல்ல சிந்தனைகளும், மன அமைதியுடன் பற்றுகளின்றி வாழ்பவர்களை ஆழ்ந்த தூக்கம் தழுவ ஆம்பிக்கும். இந்த தூக்கமே அவர்களுக்கு ஞானம் கிட்டுவதற்கு இயற்கை காட்டிய வழியாகும். மன அமைதியுடன் தூங்க மூளை நரம்புகளை அமைதிப்படுத்த வேண்டும்.நரம்புகளைத் தூண்டும் காம எண்ணங்கள், அசைவ உணவுகள் ஆகியவற்றால் தூக்கம் கெடும் வாய்ப்புண்டு. கசகசா, சீரகம், கொத்தமல்லி போன்றவையும், குறைந்த அளவு உணவு, நல்ல எண்ணங்கள், சிறு உடற்பயிற்சி, தியானம் போன்ற அமைதியான தூக்கத்தை அருகில் கொண்டு வருகின்றன. அதற்கு பதில் வேதிப்பொருட்களால் செய்யப்பட்ட தூக்கமுண்டாக்கி மருந்துகளை உட்கொள்வதால் பலஹீனம், சோர்வு, புத்துணர்ச்சியின்மை, ஞாபகமறதி மற்றும் பலவித மருந்தடிமைத்தன்மை ஏற்படுகின்றன. ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தி மன அமைதியை உண்டாக்கும் அழகான மூலிகைதான் பாஸிபுளோரா.

பாஸிபுளோரா இன்கார்னேட்டா என்ற தாவரவியல் பெயர் கொண்ட பாஸிபுளோரேசியே குடும்பத்தைச் சார்ந்த பாஸிபுளோராவில் உள்ள ஏபிஜெனின், லுட்டியோலின், குர்சிட்டின், கேம்பரால், ஹார்மின், ஹார்மலின், ஹார்மால், ஹார்மலால் போன்ற வேதிச்சத்துக்கள் மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும் தன்மையுடையவை. குளோனிடின் என்னும் மருந்தைவிட சிறப்பு வாய்ந்தவை பாஸிபுளோரா பூக்கள். உண்பதற்கு

சுவையான பாஸிபுளோரா பூக்களிலிருந்து ஜெல்லிகள், ஜாம் தயார் செய்யலாம்.

பாஸிபுளோரா பூக்களின் பூவிதழ் களை மட்டும் பிரித்து 35 கிராம் அளவு எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவைத்து, 250 மிலியாக சுண்டியபின்பு வடிகட்டி, 250 கிராம் சீனி சேர்த்து காய்ச்சி, பாகு பதத்தில் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு படுக்கும்பொழுது 10 முதல் 15 மில்லியளவு நீருடன் கலந்து சாப்பிட தூக்கம் நன்கு உண்டாகும். மனகுழப்பம் நீங்க பாஸிபுளோரா பழம், பூ மற்றும் இலைகளை நன்கு உலர்த்தி, பொடித்துவைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி பொடியை 200 மிலி நீரில் போட்டு 10 நிமிடம் கொதிக்கவைத்து வடிகட்டி, இரவில் குடிக்கலாம். மலைப்பிரதேசங்களில் பாஸிபுளோரா கொடிகள் அழகுக்காக வேலியோரங்களில் வளர்க்கப்படுகின்றன. இதன் பழங்களும் சுவையானவை. அவற்றையும் உட்கொள்ளலாம்.

டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை



எனக்கு அடிக்கடி முதுகில் பிடிப்பு ஏற்படுகிறது. இதை ஆங்கில மருத்துவரிடம் சென்று காட்டியபோது தசைப்பிடிப்பு என்று கூறி மருந்துகள் தந்தார்கள். அதனை உட்கொண்டும் எனது வலி குறையவில்லை. வாயுப்பிடிப்பாக இருக்கும் என்று சிலர் கூறுகிறார்கள். வாயுப்பிடிப்புக்கு சித்தமருந்துகள் கூறவும்.

தசைகளில் ஏற்படும் இறுக்கத்திற்கு அதற்கு தேவையான உடற்பயிற்சியை அடிக்கடி செய்ய வேண்டும். ஓமம், சீரகம், சோம்பு, வெள்ளைப்பூண்டு, பெருங்காயம் ஆகியவற்றை சம அளவு எடுத்து, அத்துடன் மொத்த அளவு கருப்பட்டி சேர்த்து அம்மியில் அரைத்து, பட்டாணியளவு தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிட்டு வெந்நீர் அருந்த வாயுப்பிடிப்பு நீங்கும்.



உலகளவில் அயோடின் குறைபாடு சார்ந்த நோய்கள் அதிகரித்து வருகின்றன. உடல் வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும், அறிவுக் கூர்மைக்கும் அத்தியாவசிய காரணியாக அமையும் தைராய்டு குறைபாட்டினால் குழந்தைகளும் கர்ப்பிணிகளும், பெண்களும் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர்.

உலகளவில் ஏழு சதவீதம்பேர் அயோடின் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். 118 நாடுகளில் அயோடின் குறைபாடு சார்ந்த நோய்கள் பெருமளவு காணப்படுகின்றன. காய்கறிகளிலும், தானியங்களிலும் மிக மிக குறைந்த அளவில் அயோடின் காணப்படுகின்றன. ஒரு நாளைக்கு 150 மைக்ரோகிராம் அயோடின் நமக்கு தேவைப்படுகிறது. இல்லாவிட்டால் தைராய்டு குறைபாடு, உடல் வளர்ச்சியின்மை, மன வளர்ச்சியின்மை ஆகியவை ஏற்படுகின்றன. கடலிலிருந்து எடுக்கப்படும் இந்துப்பில் அதிகளவு அயோடின் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.








      Dinamalar
      Follow us