தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ரத்த அழுத்தத்திற்கான மாத்திரையை நாமே குறைத்துக் கொள்ளலாமா?

ரத்த அழுத்தத்திற்கான மாத்திரையை நாமே குறைத்துக் கொள்ளலாமா?

ரத்த அழுத்தத்திற்கான மாத்திரையை நாமே குறைத்துக் கொள்ளலாமா?


PUBLISHED ON : மார் 20, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 20, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*எஸ்.ராமானுஜம், தேவகோட்டை:

TRANS FAT என்றால் என்ன? இது நம்மை எப்படி பாதிக்கிறது?



நாம் உபயோகிக்கும் சமையல் எண்ணெயை மீண்டும், மீண்டும் பயன்படுத்தும் போது TRANS FAT என்ற கெட்ட கொழுப்புகள் உற்பத்தியாகின்றன. இவை L.D.L.,என்னும் கெட்ட கொழுப்பை, குறிப்பாக 'ஸ்மால் டென்ஸ் எல்.டி.எல்.' என்ற கெட்ட கொழுப்பை அதிகரிக்கின்றன. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட அதிகம் வாய்ப்புகள் உள்ளன.எந்த தரமான எண்ணெயையும் மீண்டும், மீண்டும் நாம் சமையலுக்கு பயன்படுத்தினாலும், இவ்வகை கொடூரமான டிரான்ஸ்பேட் என்னும் கொழுப்புகள் உருவாகின்றன.இவற்றை பெரும்பாலும், ஓட்டல்கள், விடுதிகளில் அதிகம் பயன்படுத்துகின்றனர். எனவே, நம் வீட்டிலும் ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.



*கே.தங்கமுத்து, நத்தம்:

எனக்கு மூன்று ஆண்டுகளாக ரத்தக் கொதிப்பு உள்ளது. அதற்கு என் டாக்டர் இரு மாத்திரைகளை தந்துள்ளார். ரத்த அழுத்தத்தால் எனது உடலில் எந்த அறிகுறியும் இல்லை. ஆனால், மாத்திரையை எடுக்கும் போது மிகவும் சோர்வாக உள்ளது. எனவே, அதை நிறுத்தி விட்டேன். தற்போது ரத்த அழுத்தம் 150/100 என்ற அளவில் உள்ளது. நான் என்ன செய்வது?



ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்காவிட்டால் பக்கவாதம், சிறுநீரக பாதிப்பு, மாரடைப்பு போன்ற விளைவுகளை ஏற்படுத்தி விடும். ரத்தக்கொதிப்பு இருப்பதால் ஒருவருக்கு அறிகுறி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருப்பினும் ஒருவருக்கு எந்த வயதிலும், எந்த நேரத்திலும் 140/90க்கு கீழ், 120/80 என்ற அளவில் இருந்தாக வேண்டும்.உங்களுக்கு தந்துள்ள மாத்திரையால் சோர்வு ஏற்பட்டிருக்கலாம். எனவே, உங்கள் டாக்டரிடம் சென்று கலந்து பேசி, அதை மாற்றி அமைத்தால் பாதிப்பை நீக்கலாம். தற்போது ரத்தக்கொதிப்புக்கு பக்கவிளைவு இல்லாத மாத்திரைகள் உள்ளன.



* எஸ்.செல்வரத்தினம், கம்பம்:

எனக்கு ஆறு ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. அவ்வப்போது மேல் முதுகில் அழுத்தமாக உள்ளது. மாத்திரை எடுத்த பின்பும் வலி சரியாகவில்லை. நான் என்ன செய்வது?



சர்க்கரை நோய் உள்ளவர்கள் முதுகில் அழுத்தம், வலி ஏற்பட்டால் அலட்சியப்படுத்தக் கூடாது.ஏனெனில், அது இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம். ஆகவே, நீங்கள் உங்கள் இதய டாக்டரிடம் சென்று, எக்கோ கார்டியோகிராம், டிரெட் மில் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.இவ்விரு பரிசோதனைகளின் முடிவிலும் கோளாறு இருந்தால், அதற்கேற்ப உங்களுக்கு சிகிச்சை அமையும். முடிவுகள் நார்மலாக இருந்தால், அந்த வலி தசை வலியாகவோ, நரம்பு வலியாகவோ இருக்கக் கூடும்.



- டாக்டர் சி.விவேக் போஸ், மதுரை.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us