தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/நீர்க்கட்டிகளை சரி செய்ய யோகா உதவுமா?

நீர்க்கட்டிகளை சரி செய்ய யோகா உதவுமா?

நீர்க்கட்டிகளை சரி செய்ய யோகா உதவுமா?


PUBLISHED ON : ஜன 09, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 09, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் - பி.சி.ஓ.டி.,' எனப்படும் கருக்குழாய் நீர்க்கட்டி பிரச்னையால், வளர் இளம் பருவத்தினர் மிக அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

பிரச்னைக்கு இது தான் காரணம் என்று உறுதியாக இதுவரை தெரியவில்லை என்றாலும், இன்சுலின் மற்றும் 'டெஸ்டோஸ்டீரான்' ஹார்மோன்களின் சீரற்ற செயல்பாடுகளால், நீர்க்கட்டி ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

உணவு மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்தால், இப்பிரச்னையை எளிதாக கையாளலாம்.

நீர்க்கட்டி இருந்தால், அதிகப்படியான ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் இன்சுலின் ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருக்கும்; இதற்கு, 'இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்' என்று பெயர்.

இப்பிரச்னையால், ஏற்கனவே ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது, கார்போஹைட்ரேட், சர்க்கரை நிறைந்த உணவை சாப்பிட்டால் இன்னும் அதிகமாகும். எனவே, வெள்ளை ரொட்டி, பாஸ்தா, துரித உணவுகள், சிப்ஸ், வெள்ளை அரிசி, சோடா இவற்றை முற்றிலும் தவிர்த்து விடுவது நல்லது.

இதற்கு மாற்றாக முழு தானியங்கள், கோதுமை பிரட், பாஸ்தா, தோல் நீக்காத பிரவுன் அரிசி, பச்சைக் காய்கறிகள், பழங்கள், புரதச்சத்து மிகுந்த பருப்புகள், 'நட்ஸ்' அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

நீர்க்கட்டி இருந்தால் உடல் எடை அதிகமாக இருக்கும்; எனவே உடற்பயிற்சி மிகவும் அவசியம்.

நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுவது மற்றும் இந்த பிரச்னையை சரி செய்யவே சில யோகாசனங்களும் உள்ளன. அத்துடன், மூச்சுப் பயிற்சியும் சேர்த்து செய்தால், மனப்பதற்றம் குறையும். அடிவயிற்றுப் பகுதி தசைகள் சீராக இயங்கி, பிரச்னையை சரிசெய்ய உதவும்.

டாக்டர் சுபா ரவி,

யோகா மற்றும் உணவு ஆலோசகர்,

சஞ்சீவனம் ஆயுர்வேத சிகிச்சை மையம், சென்னை.

91766 02454

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us