தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பைபாஸ் சர்ஜரி செய்தால், சைக்கிள் ஓட்டலாமா

பைபாஸ் சர்ஜரி செய்தால், சைக்கிள் ஓட்டலாமா

பைபாஸ் சர்ஜரி செய்தால், சைக்கிள் ஓட்டலாமா


PUBLISHED ON : டிச 04, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 04, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எனக்கு ஓராண்டுக்கு முன் பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. ரத்தஅழுத்த நோய் உள்ளவர்களுக்கு Amlodipine, Metaprololமாத்திரைகளில் எது சிறந்தது? வீராச்சாமி, திருமங்கலம்:



பொதுவாக ரத்தஅழுத்தம் 120/80 என்ற அளவில் இருக்க வேண்டும். அதனளவு 140/90க்கு மேல் இருந்தால் உயர்ரத்த அழுத்தம் அல்லது ரத்தகொதிப்பு எனப்படும். இதற்கு வாழ்க்கை முறை மாற்றமே முதல் சிகிச்சை. தற்போது பக்கவிளைவில்லாத, மிகச்சிறந்த மாத்திரைகள் உள்ளன. அம்லோடிப்பின் என்பது ரத்தக்கொதிப்புக்கு மிகச்சிறந்த மருந்துதான். மெட்டபுரோலால் மாத்திரை, இருதய ரத்தநாளத்தில் அடைப்பு உள்ளவர்கள், ஹார்ட் பெயிலியர் உள்ளோருக்கு, ரத்தக்கொதிப்பு இருந்தால் மிகச் சிறந்த மாத்திரை. எனவே ரத்தஅழுத்த மருந்தை பொருத்தவரை ஒன்றைவிட ஒன்று சிறந்தது என சாதாரணமாக கூறிவிட முடியாது. ஒருநபரின் ரத்தஅழுத்த அளவு, அது எதனால் ஏற்படுகிறது, ரத்தஅழுத்தம் தவிர வேறு என்ன நோய் உள்ளது என்பது, அவரின் வயதை பொறுத்துமே நிர்ணயிக்கப்படுகிறது. அதை உங்கள் இருதய டாக்டரே நன்கு அறிவார்.


மெடிக்கேட்டட் ஸ்டென்ட் என்பது என்ன? இதன் பலன் என்ன? சி.மோகன், திண்டுக்கல்

இருதய ரத்தநாளத்தில் ஏற்படும் அடைப்பை சரிசெய்யும் நவீன சிகிச்சை ஆஞ்சியோ பிளாஸ்டி என்ற ஸ்டென்ட் சிகிச்சை முறை. இதில் ரத்தநாளத்தில் ஆப்பரேஷன் இன்றி ஒரு கதீட்டரை கால் அல்லது கையில் இருந்து இருதய ரத்தநாளத்திற்குள் செலுத்தி, வயரையும் செலுத்தி, அதற்கு மேல் பலூனை உபயோகித்து ரத்தநாள அடைப்பு நீக்கப்படுகிறது. பிறகு அந்த அடைப்பு மீண்டும் வராமல் இருக்க ஒரு பால்பாயின்ட் பேனாவில் பயன்படுத்தும் சிறு ஸ்பிரிங் போல ஒரு மெட்டல் டியூப் பொருத்தப்படுகிறது. இந்த மெட்டல் டியூபைத்தான் 'ஸ்டென்ட்' என்பர். இது இரு வகைப்படும்.

1- நான் மெடிக்கேட்டட் ஸ்டென்ட்,

2. மெடிக்கேட்டட் ஸ்டென்ட்.

இந்த நான் மெடிக்கேட்டட் ஸ்டென்டை பொருத்தவரை வெறும் உலோகம்தான். இதை பொருத்தினால் சர்க்கரை நோயாளிகளுக்கு மீண்டும் அதே இடத்தில் அடைப்பு வரும் தன்மை 25 சதவீதமாக உள்ளது. மெடிக்கேட்டட் ஸ்டென்டை பொருத்தவரை மெட்டல் ஸ்பிரிங்குடன் பாலிமர் என்ற பொருளும், அதனுள்ள ஒரு மருந்தும் உள்ளது. இம்மருந்து மெதுவாக ஸ்டென்டில் இருந்து, ரத்தநாளங்களுக்குள் சிலமாதங்களுக்கு செலுத்தப்படுகிறது. இந்த நோயாளிகளுக்கு மீண்டும் அதே இடத்தில் அடைப்பு வரும் தன்மை 5 சதவீதத்திற்கும் குறைவே.

இந்த மெடிக்கேட்டட் ஸ்டென்ட் இருதய நோயாளிகளுக்கு வரப்பிரசாதம். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு, சிறிய ரத்தநாளம் உள்ளவருக்கு, ரத்தநாளத்தில் நீளமான அடைப்பு உள்ளவர்களுக்கு, பைபாஸ் சர்ஜரி செய்தவர்களுக்கு மிகப்பயனுள்ளதாக உள்ளது. இதன் விலை கம்பெனி மற்றும் தரத்தை பொறுத்து ரூ. 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை உள்ளது. இந்த மெடிக்கேட்டட் ஸ்டென்ட் பொருத்தியவர்கள், ஆஸ்பிரின் மற்றும் குளோபிடோகிரெல் மாத்திரைகளை வாழ்நாள் முழுவதும் எடுப்பது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us