உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : நவ 27, 2011
அ நிறம் | அளவு
என் பற்கள் நிறம் மாறுவது ஏன்?
காபி, டீ ஆகியவற்றில் உள்ள கறைகள், பற்களின் எனாமல் மீது படிவதால் இது போல் ஏற்படுகிறது. தினமும் இருமுறை, 'பிரஷ்' செய் தால், இந்தப் படலம் ஏற்படாது. படியத் துவங் கினால், நாளடைவில், எனாமலில் ஊடுருவி நிரந்தரக் கறை ஏற்பட்டு, நீக்க முடியாத நிலையை அடையும். பிரத்தியேக மருந்துகள் மூலம் மட்டுமே இதை சரி செய்ய நேரிடும்.
'பிராங்கைட்டிஸ்' என்றால் என்ன?
மூச்சுக் குழாயையும், நுரையீரலையும் இணைக்கும் குழாயின் உள்ளே, சளிச் சவ்வில் ஏற்படும் வீக்கமே, 'பிராங்கைட்டிஸ்' என அழைக்கப்படுகிறது. இது ஏற்பட்டால், நுரையீரலின் உள்ளே மூச்சுக் காற்று சென்று, வெளியே வருவதில் சிரமம் ஏற்படும். வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றால், இது ஏற்படலாம்.
