sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

"வேறு கம்பெனி மாத்திரைகளை பயன்படுத்தலாமா'

/

"வேறு கம்பெனி மாத்திரைகளை பயன்படுத்தலாமா'

"வேறு கம்பெனி மாத்திரைகளை பயன்படுத்தலாமா'

"வேறு கம்பெனி மாத்திரைகளை பயன்படுத்தலாமா'


PUBLISHED ON : செப் 02, 2012

Google News

PUBLISHED ON : செப் 02, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இருதய நோயால் பக்கவாதம் வரும் வாய்ப்பு உள்ளதா? எஸ்.பரந்தாமன், மதுரை

இருதய நோய்க்கும், பக்கவாதத்துக்கும் பலவழிகளில் தொடர்பு உள்ளது. முதலாவதாக ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய், ரத்தத்தில் அதிக கொழுப்பு ஆகியவை இருதயத்தில் மாரடைப்பும், மூளையில் பக்கவாதத்தையும் ஏற்படுத்தும் தன்மை படைத்தவை. இதுமட்டுமின்றி, இருதய மின்னோட்டத்தில் மாறுதல், வால்வுகளில் கோளாறு, ரத்தக்குழாயில் அடைப்பு, இருதய தசைகளில் கோளாறு, இருதயத்தில் ரத்தக்கட்டி ஏற்பட்டு மூளைக்கு சென்று பக்கவாதம் போன்றவற்றை ஏற்படுத்தலாம்.

எனவே பக்கவாதம் வந்த அனைவருக்கும் முழு இருதய பரிசோதனை அவசியம் தேவையாகும். இதன் முக்கியத்துவம் என்னவென்றால், இருதய கோளாறால் ஏற்படும் பக்கவாதத்தை முழுமையாக தடுக்க இயலும். அது மருந்து மாத்திரையாலோ, அறுவை சிகிச்சையாலோ அல்லது பலூன் சிகிச்சை மூலமோ தடுக்கலாம். இருதயத்தில் உள்ள நோயை கண்டறிந்து, உடனடியாக செயல்பட்டால், அதனால் ஏற்படும் பக்கவாதம் போன்ற கொடூர நோயை தடுக்கலாம்.

ரத்தஅழுத்தத்தால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவது உண்மையா? பி.கிருஷ்ணமூர்த்தி, சிவகாசி

ரத்தஅழுத்தத்தின் சரியான அளவு 120/80 என்பதாகும். ஒருவருக்கு எந்த வயதிலும், எந்தத் தருணத்திலும் அவசியம் 140/90க்கு கீழ் இருந்தாக வேண்டும். உயர்ரத்த அழுத்தத்திற்கு 'அமைதியான ஆட்கொல்லி' (குடிடூஞுணt ஓடிடூடூஞுணூ) என்ற பெயரும் உள்ளது. அதாவது எவ்வித அறிகுறியுமின்றி, அமைதியாக உடல் உள்ளுறுப்புகளை பாதிக்கக் கூடியது இக்கொடூர நோய். குறிப்பாக மூளை, கண், இருதயம், ரத்தக்குழாய் மற்றும் சிறுநீரகத்தை பாதிக்கும் தன்மை படைத்தது. சிறுநீரகத்தை பொறுத்தவரை சிறிதளவு ரத்தஅழுத்தம் கூடினாலே, அதன் செயல்பாடு பாதிக்கப்படும் என்பது உண்மையே. எனவே உயர்ரத்த அழுத்தத்தால் சிறுநீரகம் பலவழியில் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. இதனால் சிறுநீரகம் மெதுமெதுவாக செயலிழந்துவிடும். ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் உணவில் உப்பை குறைத்து, தினசரி உடற்பயிற்சி செய்து, நிறைய காய்கறிகள், பழங்களை உட்கொண்டு, வேளை தவறாமல் மருந்து எடுத்துக் கொண்டு, சிறுநீரகத்தை கண்காணித்துக் கொள்ள வேண்டும்.

எனக்கு பைபாஸ் சர்ஜரி செய்து 2 மாதங்களாகிறது. நான் கனமான பொருட்களை தூக்கலாமா? பி. கார்த்திகேயன், தேவகோட்டை

இருதய கோளாறு உள்ளவர்கள், ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து கொண்டவர்கள், பைபாஸ் சர்ஜரி செய்தவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கனமான பொருட்களை தூக்குவது நல்லதல்ல. கனமான பொருட்களை சிரமப்பட்டு தூக்குவதால், ரத்தஅழுத்தம், இருதயத் துடிப்பு போன்றவை திடீரென அதிகரிக்கும். இதனால் இருதயத்திற்கு பலவழிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இருதய நோயாளிகள் 5 கிலோவுக்கு மேல் கனமான பொருட்களை தூக்குவதைத் தவிர்க்க வேண்டும்.



எனக்கு 2 ஆண்டுகளாக இருதய நோய் உள்ளது.
எஸ். நடராஜன், வேடசந்தூர்

ஆறுவகை மாத்திரைகளை தொடர்ந்து எடுத்து வருகிறேன். தற்போது வசிக்கும் இடத்தில் மாத்திரைகள் சில கிடைப்பதில்லை. வேறொரு கம்பெனியின் தயாரிப்பான அதே மருந்து கிடைக்கிறது. அதை நான் பயன்படுத்தலாமா? இருதய நோயை பொறுத்தவரை பெரும்பாலான நிறுவனங்களின் தயாரிப்புகள் தரமானதாகவே உள்ளன. எனவே அதே மருந்தின் வேறொரு கம்பெனியின் தயாரிப்பை எடுப்பதில் தவறில்லை. இருந்தாலும் சில கம்பெனி மருந்துகளின் தரம், மற்றொரு கம்பெனியின் தரத்துடன் சற்றே வேறு படலாம். உங்கள் டாக்டரிடம் இந்த கம்பெனி மருந்துக்குப் பதில், உங்களுக்கு கிடைக்கும் மாற்று கம்பெனியின் மருந்தை எடுக்கலாமா என ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது.






      Dinamalar
      Follow us