தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/புகையிலை சுவைத்தால் புற்றுநோய்

புகையிலை சுவைத்தால் புற்றுநோய்

புகையிலை சுவைத்தால் புற்றுநோய்


PUBLISHED ON : பிப் 17, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 17, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

என் மகனுக்கு சாதாரணமாக மூச்சு விடுவதில் சிரமம் இல்லை. ஆனால், அவன் பள்ளியில் விளையாட செல்லும்போது மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகிறது. இது எதனால்?

இதை ஆங்கிலத்தில் 'எக்ஸர் சைஸ் இன்டுஸ்ட் ஆஸ்த்மா' என்பர். விளையாடும்போது மட்டும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அதாவது மூச்சுக் குழாய் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் இருக்கும்.ஆனால், இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு விளையாடும் போது வெப்பநிலை குறைந்து மூச்சுக்குழாய் குளிர்ச்சி அடைந்து மூச்சு விடுவதில் சிரமத்தை உண்டுபண்ணும். இதற்கு விளையாட போகும் முன் 'இன்ஹோலரை' உறிஞ்சி விட்டு சென்றால் பாதிப்பு இல்லை.

என் தங்கைக்கு நுரையீரலில் உள்ள குழாயில் ரத்தக்கட்டு ஏற்பட்டு உள்ளது. மருத்துவரை அணுகிய போது, அவர் காலில் 'டாப்லர் ஸ்கேன்' செய்து வரச் சொன்னார். இது எதற்காக?

நுரையீரலில் உள்ள ரத்தக்குழாயில் ரத்தக்கட்டு இருந்தால் அந்த ரத்தக்கட்டு எங்கிருந்து வந்தது என்பதை முதலில் கண்டறியவேண்டும். அதிகமாக இந்த ரத்தக்கட்டு காலில் இருந்து வரும் வாய்ப்புள்ளது. நின்று கொண்டே வேலை பார்க்கும் தொழில் செய்பவர்களுக்கு வர வாய்ப்புள்ளது.

உதாரணமாக செவிலியர்கள், கண்டக்டர்கள், வீட்டு காவலாளிகள் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் போன்றவர்கள் அதிக நேரம் நின்று கொண்டே இருப்பதால் அவர்களுக்கு காலில் ரத்தக்கட்டு ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, தான் மருத்துவர் காலில் 'டாப்ளர் ஸ்கேன்' செய்ய சொல்லி இருக்கிறார்.

என் மாமாவுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லை. ஆனால் புகையிலை சுவைக்கும் பழக்கம் உண்டு. சமீபத்தில் அவரக்கு புற்று நோய் வந்து விட்டது. புகையிலை சுவைப்பதால் புற்று நோய் வருமா?

கண்டிப்பாக வரும், சிகரெட் புகையில் எவ்வளவு நச்சுத்தன்மை உள்ளதோ, அந்தளவுக்கு புகையிலையிலும் நச்சுத்தன்மை அதிகம் உள்ளது. புகை பிடிப்பதால் உடலில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் புற்றுநோயை உண்டாக்கும்.

அதேபோல் புகையிலை சுவைப்பதிலும் உடலில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் புற்றுநோய் வரலாம். எனவே, புகையிலை சுவைப்பதை, சிகரெட் பிடிப்பதை நிறுத்துவது நல்லது.

காசநோய் எப்படி பரவுகிறது அது யாரை அதிகம் பாதிக்கும்?

காசநோய் உள்ளவர்கள் இருமினாலோ, தும்மினாலோ, சளியை சிந்தினாலோ அவர்களிடமிருந்து வெளிவரும் காசநோய் கிருமி காற்றில் பரவி மற்றவர்களை தொற்றும் வாய்ப்புள்ளது. சுமாராக காச நோயாளி தன் நோயை 10 முதல் 15 பேருக்கு பரப்ப முடியு். அவர்கள் பேசும் போதும் கூட நோய் பரவும் வாய்ப்புள்ளது. இந்த கிருமிகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் ஆகியோரை அதிகம் பாதிக்கும்.

- டாக்டர் மா. பழனியப்பன்

நுரையீரல் சிறப்பு நிபுணர், மதுரை.

97919 19507


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us