தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பல மொழிகள் பேசி பழகும் குழந்தை

பல மொழிகள் பேசி பழகும் குழந்தை

பல மொழிகள் பேசி பழகும் குழந்தை


PUBLISHED ON : பிப் 17, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 17, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தை சேர்ந்த நானும், கேரளாவை சேர்ந்த என் மனைவியும் துபாயில் பணிபுரிகிறோம். எங்கள் குழந்தைக்கு ஒன்றரை வயதாகிறது. சரியாக பேச மறுக்கிறான். ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசுகிறான். பெற்றோர் எங்களை இந்தியா வரும்படி அழைக்கின்றனர். நாங்கள் என்ன செய்வது? குழந்தை நன்றாக பேச வழி உண்டா?

பெற்றோர் வீட்டில் ஒரு மொழியும், வெளியில் ஒரு மொழியும் பேசும் போம், தாயும், தந்தையும் அவரவர் தாய்மொழியில் பேசும் போதும் குழந்தை குழப்பமுற நேரிடலாம். பொதுவாக குழந்தைகள் இரண்டு அல்லது மூன்று மொழிகளை சரளமாக பேசி பழகி கொள்வது நல்லது. பல மொழிகளில் பேசுவது பிற்காலத்துக்கு உதவும். நீங்கள் துபாயில் இருப்பதால் ஆங்கிலம் போன்ற பிற மொழிகளை பேசி பழகுவது நல்லது. இரண்டு மொழிகள் கற்ற குழந்தைகள் படிப்பிலும், அறிவுசார் விஷயங்களிலும் சிறந்து விளங்குவர் என ஆய்வுகள் கூறுகின்றன.

குழந்தைகள் நன்றாக பேச 'டிப்ஸ்':

உங்களுடைய குழந்தையிடம் எந்த மொழி மிகவும் பரிச்சயமாக உள்ளமோ அம்மொழியில் முதலில் பேசுங்கள். பின் மற்றொரு மொழியை அறிமுகப்படுத்துங்கள்.

முதல் மொழியை நன்கு கற்றபின் 2வது மொழியை பழகட்டும், பொது இடங்களில் தாய் மொழியில் பேச கூச்சப்படாதீர்கள். தாய் மொழியில் பேசுவதை பெருமையாக நினைத்து கற்றுக் கொடுங்கள். பேசும் மொழிகளின் பெயர்களை நன்கு கற்றுக் கொடுங்கள். தாய்மொழியில் குறும்பாடல்கள், கதைகள் சொல்ல கற்றுக் கொடுங்கள்.

குழந்தை வேறு மொழியில் பேசினாலும், நீங்கள் தாய் மொழியில் பதிலளியுங்கள். குழந்தைகளிடம் பேசுவதற்கு பிரத்யேகமாக நேரம் ஒதுக்குங்கள். அந்த நேரத்தில் டிவி, அலைபேசி, வானொலி போன்ற உபகரணங்களால் கவனச்சிதறல் இன்றி பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதால் குழந்தையின் பேசும் திறன் மேம்படும்.

- டாக்டர் முருகன் ஜெயராமன்

குழந்தைகள் நல நிபுணர்

மதுரை


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us