sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

"புற்றுநோய் என்பது தொற்றுநோய் அல்ல'

/

"புற்றுநோய் என்பது தொற்றுநோய் அல்ல'

"புற்றுநோய் என்பது தொற்றுநோய் அல்ல'

"புற்றுநோய் என்பது தொற்றுநோய் அல்ல'


PUBLISHED ON : ஆக 18, 2013

Google News

PUBLISHED ON : ஆக 18, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடும்பத்தில் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தால், அவரை ஒதுக்கி வைக்காதீர்கள். முறையான சிகிச்சை அளித்தால், குணப்படுத்தி விடலாம். புற்றுநோய் பாரம்பரிய நோய் என்று கூற முடியாது

சென்னை அரசு பொதுமருத்துவமனையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, இரைப்பை, குடல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில், குடல், இரைப்பைத் துறைத் தலைவர் சந்திரமோகன் தலைமையிலான நிபுணர்கள் குழு, பொதுமக்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தது. இதுபற்றிய விவரம்:

1. இரைப்பை புற்றுநோய் அறிகுறிகள் என்ன? முற்றிலும் குணப்படுத்த முடியுமா?

ஆரம்ப நிலை என்றால், அஜீரண கோளாறு, பசியின்மை, ரத்த சோகை போன்றவை அறிகுறிகள். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக, 'எண்டோஸ்கோபி' எனப்படும், இரைப்பை உள்நோக்கி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

நாட்பட்ட புற்றுநோய் என்றால், உடல் இளைத்தல், வலி, வாந்தி, ரத்த வாந்தி, கறுப்பு நிறத்தில் மலம் போகுதல் போன்றவை அறிகுறிகள்.

2. குடல், இரைப்பை புற்றுநோயை குணப்படுத்த முடியுமா?

நோய் தாக்குதலை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, முறையான சிகிச்சை அளித்தால், முற்றிலும் குணப்படுத்தலாம். மிக முற்றிய நிலையில் வரும்போது, அறுவைச் சிகிச்சை செய்ய முடியாத சூழல் ஏற்பட வாய்ப்புண்டு.

3. புற்றுநோய் ஒருவர் மூலம் மற்றவர்களுக்கு பரவுமா? பாரம்பரிய வியாதியா?

புற்றுநோய் என்பது தொற்று நோய் அல்ல; ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு நிச்சயம் பரவாது. விவரம் தெரியாமல் யாராவது சொன்னால், நம்பவேண்டாம். குடும்பத்தில் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தால், அவரை ஒதுக்கி வைக்காதீர்கள். முறையான சிகிச்சை அளித்தால், குணப்படுத்தி விடலாம். புற்றுநோய் பாரம்பரிய நோய் என்று கூற முடியாது என்றாலும், 10 சதவீதம் மரபு ரீதியாக வருவதாக, ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

4. புற்றுநோய் பாதிப்பு எதனால் வருகிறது?

புகை பிடித்தல்; புகையிலைப் பொருட்களை சுவைத்தல்; மதுப் பழக்கம், பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல் போன்றவற்றால், இரைப்பை, குடல் புற்றுநோய் வரும். பொதுவாக, தவறான வாழ்க்கை முறை என்று சொல்லலாம். இந்த பாதிப்பு நமக்கு வருவதும், வராமல் இருப்பதும் நம் கையில்தான் உள்ளது. வாழ்க்கை முறை நன்றாக இருந்தால் பாதிப்பு வர வாய்ப்பில்லை.

5. கிருமி பாதிப்பு தான் காரணம் என்று சொல்லப்படுகிறதே?

'ஹெச்-பைலோரி' என்ற கிருமியும் காரணம். ஆரம்ப நிலையில் நோய் கண்டறியப்பட்டால், ஓரிரு வாரங்களில் இந்த கிருமியைக் முற்றிலும் கட்டுப்படுத்தி விட முடியும் என்பதால், பயப்பட வேண்டியதில்லை.

6. வயதானவர்களுக்கு புற்றுநோய் அறுவைச் சிகிச்சை செய்வது சாத்தியமா?

புற்றுநோய் சிகிச்øŒக்கென நவீன மருத்துவ வசதிகள் வந்துவிட்டன. 100 வயதுடையோருக்கும் அறுவைச் சிகிச்சை செய்யலாம். வயது முக்கியமல்ல; நோயின் தாக்கம் எந்த நிலையில் உள்ளது என்பதுதான் பிரச்னை.

7. 'கீமோதெரபி' சிகிச்சையால் முடி கொட்டுவது ஏன்? எல்லோருக்கும் முடி கொட்டுமா?

எல்லோருக்கும் முடி கொட்டாது. சாதாரண கீமோதெரபி சிகிச்சையால் பிரச்னை இல்லை. சிறுவயதில், குடல், இரைப்பை புற்றுநோய் பாதிப்புள்ளோருக்கு, 'பவர்புல்' கீமோதெரபி தருவதால் முடி கொட்டும்; மீண்டும் முளைக்கவும் வாய்ப்புள்ளது. முடியை விட, அவரின் உயிர் முக்கியம் என்பதை உணர வேண்டும்.

8. மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் பக்க விளைவு வராதா?

பக்க விளைவுகள் இல்லாத மாத்திரைகளே இல்லை; மாத்திரையால் ஏற்படும் பக்க விளைவை விட, நோயைக் குணப்படுத்தும் தன்மை அதிகம் என, அறிந்து தான் மாத்திரைகள் தரப்படுகின்றன. இதற்காகத் தான், டாக்டர்கள் ஆலோசனையின்றி கண்டபடி மாத்திரை சாப்பிட வேண்டாம் என, அறிவுறுத்துகிறோம்.

இவ்வாறு விளக்கம் அளித்தனர்.






      Dinamalar
      Follow us