PUBLISHED ON : ஆக 11, 2013

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்ணன், தஞ்சாவூர்: மூட்டு வலியால் பாதிக்கப்பட்ட நான், கடந்த வாரம் 'ஐபுரூபென்' என்ற மாத்திரையை எடுத்தேன். மறுநாள் வயிற்றுவலி, ரத்த வாந்தி ஏற்பட்டது. ஒரு டாக்டரிடம், 'எண்டாஸ்கோபி' செய்து பார்த்ததில், நன்றாக உள்ளேன். பாதிப்புக்கு, 'ஐபுரூபென்' மாத்திரை காரணமா?
'ஐபுரூபென்' மருந்து, வலிக்கும், உள்புண்ணின் வீக்கம் குறைவதற்கும் கொடுக்கப்படுகிறது. இம்மருந்திற்கு உள்ள பக்கவிளைவு, வயிற்றுப் புண், சிறுநீரக, கல்லீரல் கோளாறு ஆகும். டாக்டர் ஆலோசனையுடன், குறுகிய காலம் எடுக்கலாமே தவிர, இம்மருந்தை பொதுவாக தவிர்ப்பது நல்லது.