sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

மழைக்காலத்தில் எடுக்க வேண்டிய கர்க்கடக சிகிச்சை

/

மழைக்காலத்தில் எடுக்க வேண்டிய கர்க்கடக சிகிச்சை

மழைக்காலத்தில் எடுக்க வேண்டிய கர்க்கடக சிகிச்சை

மழைக்காலத்தில் எடுக்க வேண்டிய கர்க்கடக சிகிச்சை


PUBLISHED ON : ஜூலை 27, 2025

Google News

PUBLISHED ON : ஜூலை 27, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீ ட்டு வேலை, ஆபீஸ் வேலை, வீட்டு முதியோர், குழந்தைகள் பராமரிப்பு...இப்படி ஓடிக்கொண்டே இருந்த காயத்ரி, ஒரு கட்டத்தில் மெஷினாகவே மாறிப்போனாள்.

தலைவலியும், உடம்பு வலியும் பாடாய்படுத்தியது. உடன் பணிபுரிபவர்கள், 'இது ஸ்ட்ரெஸ்' என்றும், ஆயுர்வேதத்தில் இதற்கு நல்ல சிகிச்சை இருக்கிறது என்றும் சொன்னார்கள்.

கோவை ராமநாதபுரம் தன்வந்திரி ஆர்ய வைத்திய பார்மசி மருத்துவமனையை அணுகியபோது, 'கர்க்கடக சிகிச்சை' எடுத்துக் கொள்ளுங்கள். புது மனுஷி ஆகி விடுவீர்கள் என்றார்கள்.

அதென்ன கர்க்கடக சிகிச்சை? பதிலளிக்கிறார், ஆர்ய வைத்திய சிகிச்சாலயம் மற்றும் ஆராய்ச்சி நிறுவன மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் தாரா ஜெயஸ்ரீ.

பாரம்பரியமாகவே 'தலைக்கு எண்ணெய் வை... எண்ணெய் தேய்த்து குளி...' என்று, நம் பாட்டிகள் சொல்லி கேட்டு இருப்போம். இப்போது அதை யாரும் செய்வதில்லை. இவை அனைத்தும் ஆயுர்வேத பாரம்பரிய முறைகள் தான்.

பெற்றோர் கட்டாயம் பிள்ளைகளுக்கு, தலைக்கு அடிக்கடி எண்ணெய் வைத்து குளிப்பதையும், உடலில் எண்ணெய் தேய்த்து குளிப்பதையும், வீடுகளில் பழக்கப்படுத்த வேண்டும்.

மலையாள மாதங்களில் கடைசி மாதம் கார்க்கடகம்; தமிழில் பொதுவாக ஆடிமாதம் வரும். பருவமழை காலங்களில் பொதுவாக நம்மிடம், ஈரப்பதம் அதிகரித்து, வாதம், பித்தம், கபம் மூன்றும் சமநிலையில் இருக்காது.

அதை சமநிலைபடுத்துவதற்கு, மசாஜ் சிறந்த தீர்வு. உடல் கழிவுகளை வெளியேற்றி, ரத்த ஓட்டம், தசை செயல்பாடு என, முடி முதல் பாதம் வரை பாதிப்புகளின் தன்மை பொறுத்து, மசாஜ் செய்து குணமாக்கும் சிகிச்சை முறை இது.

இதனை 'கார்க்கடக மாத சிகிச்சா' என கூறுவார்கள். இம்மாதங்களில், ஆயுர்வேத மசாஜ் செய்து கொள்வது சிறந்தது.

உடலுக்கு புத்துணர்வை அளிக்க கூடியது. பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, இந்த மசாஜ் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

உடல் கோளாறுகளை பொறுத்து, மசாஜ் சிகிச்சை முறை பரிந்துரைக்கப்படும். கட்டண முறையில் இங்கேயே தங்கியும், வெளியில் இருந்து வந்து சென்றும், சிகிச்சை எடுக்கும் வசதிகள் உள்ளன.

அவ்வளவும் ஆரோக்கியம்!

அபயங்கம் ஆயுர்வேத எண்ணெய் மசாஜ் உடல் வலி, களைப்பு, இறுக்கத்தன்மையை நீக்கி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நல்ல துாக்கத்தை வரவழைக்கக்கூடியது. மூட்டு, தசை ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. சிரோதாரை மனதை அமைதிப்படுத்தும், மனஅழுத்தம் மற்றும் கவலைக்கான நிவாரணத்தை வழங்கும், துாக்கத்தின் தரத்தை மேம்படுத்தும், மனத்தெளிவை உயர்த்தும்; தலைவலி மற்றும் நரம்பியல் பிரச்னைகளை சமாளிக்க உதவும் ஒரு ஆழமான அமைதியை, அளிக்கும் ஆயுர்வேத சிகிச்சை. பிழிச்சல் உடல் வலியை குறைக்கும், தசைகள் மற்றும் மூட்டுகளை வலுப்படுத்தும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், சருமத்தைப் போஷிப்பதும், நரம்பியல் மற்றும் கீல்வாதம் தொடர்பான பிரச்னைகளை சமாளிக்க உதவும், புத்துணர்ச்சி தரும் சிகிச்சை.

நவரக்கிழி தசைகளை வலுப்படுத்தும், சருமத்தின் நிறத்தையும், அமைதியையும்மேம்படுத்தும், மூட்டு வலியை குறைக்கும், இரத்த ஓட்டத்தை உயர்த்தும்; உடலுக்கு புத்துணர்வூட்டும். நஸ்யம் மூக்கடைப்பு, தலைவலி, மருமூச்சு, அலர்ஜி மற்றும் சைனஸ் பிரச்னைகளை நிவர்த்தி செய்து, சுவாசத்தை மற்றும் மனத் தெளிவை மேம்படுத்தும் ஒருபயனுள்ள ஆயுர்வேத சிகிச்சை. விரேசனம் உடலை 'டீ டாக்ஸ்' செய்யும், ஜீரணத்தை மேம்படுத்தும், பித்தத்தைக் சமநிலைப்படுத்தும் மற்றும் சரும நோய்கள், அலர்ஜிகள் மற்றும் கல்லீரல் பிரச்னைகளை நிர்வகிக்க உதவும். தர்பணம் கண்களை வலுப்படுத்தி, வறட்சி மற்றும் கண் சோர்வை குறைத்து, பார்வை தெளிவை மேம்படுத்தி, சோர்வான கண்களை ஆற வைக்கும் ஒரு போஷனையூட்டும் ஆயுர்வேத சிகிச்சை.






      Dinamalar
      Follow us