PUBLISHED ON : ஆக 03, 2025

ஜீரண மண்டல ஆரோக்கியத்தில் இரண்டு விஷயங்கள் தற்போது பிரதானமாக இருக்கின்றன. ஒன்று, 'கட் மைக்ரோபயோட்டா' எனப்படும் ஜீரண மண்டலத்தில் இருக்கும் நுண்ணுயிரிகள், அவற்றின் பங்களிப்பு பற்றியது.
இரண்டாவது, 'கட் பிரைன் ஆக்சஸ்' எனப்படும் மூளையும், ஜீரண மண்டலமும், ஒன்று மற்றொன்றின் மீது எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதாகும்.
இதற்கு மிகச் சரியான உதாரணம், வாயு தொல்லை உட்பட வயிறு தொடர்பான பிரச்னைகள் வரும் போது, சோர்வு, கவனமின்மை, தலைவலி போன்ற மூளை தொடர்புடைய பிரச்னையை ஏற்படுத்தும்.
மன அழுத்தம், ஞாபக மறதி, பதற்றம், துாக்கமின்மை உட்பட மூளை தொடர்பான பிரச்னைகள் இருந்தால், செரிமானமின்மை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, ஒழுங்கற்ற மலப்பழக்கம் ஏற்படலாம்.
நம் குடலில் கோடிக்கணக்கில் நுண்ணுயிரிகள் உள்ளன. இவற்றில், செரிமானத்திற்கு உதவக்கூடிய நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் எந்த அளவு உள்ளன; கெடுதல் செய்பவை அதிகம் உள்ளதா என்பதை பரிசோதனை வாயிலாக தெரிந்து கொள்ள முடியாது; அறிகுறிகளை வைத்தே சொல்ல முடியும். மன அழுத்தம் இல்லாமல் இருந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் வராது. வயிறும், மூளையும் நேரடி தொடர்பில் உள்ளவை.
மூளையும், செரிமான மண்டலமும் ஆரோக்கியமாக இருக்க, ஆழ்ந்த துாக்கம், புரோ பயாடிக், நார்ச்சத்து நிறைந்த சமச்சீரான உணவுகளை சாப்பிடுவது, நல்ல பாக்டீரியாக்களை பெருகச் செய்ய உதவும்.
டாக்டர் பி.செந்தில்நாதன், இயக்குநர், ஜீரண மண்டல பிரிவு, ஜெம் மருத்துவமனை, சென்னை044 - 6166 6666. 95002 00600bariatric@gemin s titute.in

