தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/தோல் பளபளப்பு பெற கேரட் நல்லது

தோல் பளபளப்பு பெற கேரட் நல்லது

தோல் பளபளப்பு பெற கேரட் நல்லது


PUBLISHED ON : பிப் 19, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 19, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதில், கேரட்க்கு முக்கிய பங்கு உண்டு. அதனால் தான், குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்ட துவங்கும் போது, தாய்மார்கள் கேரட் சாதத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். இதனால், மேனி பளபளப்படைவதோடு, நோயின்றியும் வாழலாம்.

கேரட் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன பார்க்கலாமா? காலை நேரத்தில் அரை டம்ளர் கேரட் சாறு குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும்; வயிறு சுத்தமாகும்.

உணவு நன்கு செரிமானம் ஆவதற்கும், பூச்சிகளால் வரும் நோய்களை தடுப்பதற்கும், கேரட் சிறந்த நிவாரணி. உலர்ந்த சருமம் இருப்பவர்கள், கேரட் சாறுடன் தேன் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து, முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து கழுவினால், சருமத்துக்கு தேவையான சத்து கிடைக்கும்.

கேரட்டில் உள்ள வைட்டமின் 'ஏ' சத்து, கண்களுக்கு பலம் கொடுக்கக் கூடியது. விழித்திரைக்கு பலம் சேர்ப்பதால், கண் பார்வை நன்றாக இருக்கும். தோலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. கோடைகாலத்தில் வெளியில் சென்று வரும்போது, புற ஊதா கதிர்கள் தோலை பாதிப்பதால், தோல் கருப்பாகும். கேரட் உண்பதால், இதை தடுக்கலாம். தோலில் சிராய்ப்பு காயம், அரிப்பு இருந்தால் கேரட்டை பசையாக்கி தடவினால் அரிப்பு, சிவப்பு தன்மை போகும். வேர்க்குரு மறையும்.

தோலில் ஏற்படும் பிரச்னைக்கு, மேல் பூச்சு மருந்தாக பயன்படுத்தலாம். புண்களை ஆற்றும் வல்லமை உடையது. கேரட் கிருமிகளை அழித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வீக்கம், வலியை கரைக்கக் கூடியது. கேரட்டை பயன்படுத்தி, கோடைகாலத்துக்கான ஜூஸ் தயாரிக்கலாம்.

ஒரு டம்ளர் கேரட் சாறுடன் சிறிது ஏலக்காய் பொடி, பனங்கற்கண்டு சேர்த்து காலையில் குடித்து வந்தால், உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு ஏற்படும். உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும்.

கோடைகாலத்தில் உடலில் இருந்து வெளியேறும் நீர்ச்சத்தை சமப்படுத்தும். நாக்கு, தொண்டை, குடலில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. கேரட்டை பயன்படுத்தி அல்சருக்கான மருந்து தயாரிக்கலாம்.

கேரட் துருவலுடன் உப்பு, அரை ஸ்பூன் தனியா பொடி, மல்லி, புளிப்பில்லாத தயிர் கலந்து, சாப்பிட்டு வந்தால், வயிற்றுப்புண் சரியாகும்; வயிற்று வலி குணமாகும். நாள் முழுவதும் புத்துணர்வு ஏற்படும். எலும்புகள், பற்கள், தோல், கண் ஆகியவற்றுக்கு நன்மை தரும்.

கேரட்டை மென்று சாப்பிட்டு வந்தால், வாயில் இருக்கும் கிருமிகள் அழிந்து, பற்களுக்கு பலம் கிடைக்கிறது. கேரட்டை பசையாக அரைத்து, சிறிது மஞ்சள் சேர்க்கவும். சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். இதை வடிக்கட்டி குடித்து வந்தால் புண்கள் ஆறும். நரம்பு மண்டலங்கள் பலம் பெறும். ரத்த அணுக்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

தினமும், கேரட்டை உணவில் சேர்த்து வந்தால், நோயின்றி வாழலாம். உடல் பலமடைந்து, ஆரோக்கியம் மேம்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us