தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/அல்சருக்கு காரணம் மனக்கவலையும்தான்!

அல்சருக்கு காரணம் மனக்கவலையும்தான்!

அல்சருக்கு காரணம் மனக்கவலையும்தான்!


PUBLISHED ON : பிப் 19, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 19, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பசித்ததும் வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங்கும். அந்நேரம் சாப்பாட்டை தவிர்த்தால், குடல் புண் வரலாம். குறிப்பாக காலை உணவை தவிர்ப்பதாலும், நேரந்தவறி சாப்பிடுவதாலும், குடல் புண் வரும் வாய்ப்புகள் அதிகம். புகைப்பிடித்தல், புகையிலையை சுவைத்தல், மது அருந்துதல் வலி மருந்து, மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்தல், குடல் புண்ணுக்கு வழி வகுக்கிறது.

அதிக காரம் அல்லது எண்ணெயில் பொரித்த உணவு உண்பதாலும், கவலை, மன அழுத்தம் காரணமாகவும், வயிற்றில் அதிக அமிலம் சுரந்து புண் ஏற்படலாம். வாய்வு கோளாறால் ஏற்படும் குடல் புண், சிறு குடலில் ஏற்படும் குடல் புண் என, இரண்டு வகை உண்டு. இரண்டையும் சேர்த்து பெப்டிக் அல்சர் என, சொல்வார்கள். வயிற்றின் மேல் பகுதியில் எப்போதும் வலியிருக்கும். சாப்பிட்ட பின், இந்த வலி குறைந்தால் அது டியோடினல் அல்சர். மாறாக வலி அதிகரித்தால், அது காஸ்ட்ரிக் அல்சர்.

குடல் புண்ணுக்கு மருத்துவம்

பூரண ஓய்வையும், அதிக தூக்கத்தையும் பெரும்பாலான டாக்டர்கள் சிபாரிசு செய்கிறார்கள். தீவிரமான வேலைகளில் இருந்து, இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது. அமிலத்தை நடுநிலையாக்கும் மருந்துகளை, அடிக்கடி சாப்பிட வேண்டும். கவலைகள் குடல் புண்ணை அதிகப்படுத்தும். டாக்டரின் ஆலோசனைப்படி, மனதுக்கு அமைதி தரும் மருந்துகளை சாப்பிடலாம்.

செய்யக்கூடாதவை

புகைபிடிக்கக் கூடாது. மது, காபி பானங்களை குடிக்கக் கூடாது. வயிற்று வலியை அதிகப்படுத்தக் கூடிய, உணவு வகைகளை உண்ணக் கூடாது. அதிகமாக சாப்பிடக்கூடாது; பட்டினி கிடக்கக்கூடாது. காரம், எண்ணெயில் பொரித்த உணவுகளை குறைக்க வேண்டும். பின்னிரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.

சாப்பிட வேண்டிய உணவுகளை தவிர்க்கக் கூடாது. சாப்பிட்டவுடன் முன்பக்கமாக சாய்வதோ, வளைவதோ கூடாது. அப்படி செய்தால் சாப்பிட்ட உணவு, தொண்டைக் குழிக்குள் வந்து சேரும். இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம். இரவில் அதிக நேரம் விழித்திருக்கக் கூடாது. மனநிலை தடுமாறாமல் இருக்க வேண்டும். அவசரம், கவலை கூடாது. மருத்துவ ஆலோசனைகளை அலட்சியப்படுத்தக் கூடாது. சாப்பிட்டு இரண்டு மணி நேரத்துக்குள் படுக்கக்கூடாது.

செய்ய வேண்டியவை

குறைவாக, சிறு இடைவேளைகளில் அடிக்கடி சாப்பிட வேண்டும். அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக வாழை பழங்களைச் சாப்பிட வேண்டும்.

தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட, சுவையூட்டிய லஸ்ஸி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும். இடுப்பு பெல்ட், உடைகள் இறுக்கமாக இருக்கக்கூடாது. மருத்துவரின் ஆலோசனைப்படி, படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்திக் கொள்ளலாம். யோகாசனம், தியானம் முதலியவற்றை பயில வேண்டும். மன இறுக்கத்தை விடுத்து, மகிழ்சியோடு இருக்க வேண்டும். அலுவலக வேலைகளை அங்கேயே விட்டு விட வேண்டும்.

சாப்பிட வேண்டியவை

சத்தான சரிவிகித உணவுகளை, குறிப்பிட்ட நேரத்தில் உண்ண வேண்டும். காபி, மது, காற்று அடைக்கப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும். டீயின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கி விட வேண்டும். மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக, தயிர் முதலியன நல்லது. பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள், குடல் புண்களை ஆற்றும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us