குழந்தைகளின் பாதுகாப்பிற்கு செர்வேரிக்ஸ் தடுப்பூசி!
குழந்தைகளின் பாதுகாப்பிற்கு செர்வேரிக்ஸ் தடுப்பூசி!
PUBLISHED ON : ஏப் 27, 2025

கர்ப்பப்பை வாய் கேன்சரை, 'ஹெச்பிவி, பேப்ஸ்மியர்' சோதனை வாயிலாக ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்கலாம்.
நம் நாட்டில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய், பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
பெண்களின் புற்றுநோய் இறப்புகளுக்கு இரண்டாவது முக்கிய காரணமாகும்.
இதற்கான பரிசோதனைகளில், உலக சுகாதார மையம் புதிய வழிகாட்டுதல்களை பரிந்துரைத்து உள்ளது.
குறிப்பாக, பேப்ஸ்மியர் மூலம் பரிசோதிப்பதை விட, மரபணு அடிப்படையிலான சோதனையை பரிந்துரைக்கிறது. ஹியூமன் பேப்பிலோமா வைரஸ் ஹெச்பிவி தொற்று இதற்கு காரணம். தொற்று பாதித்த 20 ஆண்டுகள் கழித்தே புற்று நோய் பாதிப்பு வரும்.
புகையிலை துணை தயாரிப்புகள், கர்ப்பப்பை வாய் செல்களின் மரபணுவை சிதைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். தொற்று ஏற்படாமல் தடுக்க, பாதுகாப்பான உடலுறவு அவசியம்.
பிறப்புறுப்பில் வெள்ளை படுதல், அதன் நிறம், தன்மையில் வேறுபாடு இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
ஹெச்பிவி தடுப்பூசி இப்போது நம் நாட்டில் கிடைக்கிறது.
கார்டாசில், 6, 11, 16, 18 போன்ற ஹெச்பிவி வைரஸ் வகை பாதிப்பிற்கு எதிராக பாதுகாப்பு தரும். இது தவிர, செர்வேரிக்ஸ் என்ற தடுப்பூசியும் உள்ளது.
ஒன்பது, -14 வயதிற்குள் தடுப்பூசி போடுவது ஹெச்பிவி வைரசில் இருந்து பாதுகாப்பு தரும். நம் நாட்டில், 9 - 14 வயதினருக்கு இரண்டு டோஸ்கள், 15 - 45 வயதினருக்கு மூன்று டோஸ்கள் போட வேண்டும்.
அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக இத்தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக சமீபத்தில் அறிவித்து உள்ளது.
தமிழக அரசும் இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், அனைத்து பெண் குழந்தைகளுக்கும் இலவசமாக தடுப்பூசியை வழங்க 26 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
டாக்டர் கே.அஸ்மி சவுந்தர்யா, ஆலோசகர்,
கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர்,
ஐஸ்வர்யா மருத்துவமனை, சென்னை044 - 2025 2025cc@iswarya.in

