sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

'குடி'மகனே... பெரும் குடிமகனே... - நீ நினைத்தால் இன்றே திருந்த முடியும்!

/

'குடி'மகனே... பெரும் குடிமகனே... - நீ நினைத்தால் இன்றே திருந்த முடியும்!

'குடி'மகனே... பெரும் குடிமகனே... - நீ நினைத்தால் இன்றே திருந்த முடியும்!

'குடி'மகனே... பெரும் குடிமகனே... - நீ நினைத்தால் இன்றே திருந்த முடியும்!


PUBLISHED ON : ஆக 15, 2020

Google News

PUBLISHED ON : ஆக 15, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாக்டர்...இன்றைய நிலையில், குடிப்பழக்கம்தான் மிக கொடிய நோயாக உள்ளது. இதை தடுக்க, பல்வேறு யுக்திகள் இருந்தாலும், அவை எதுவும் பெரிய வெற்றியை பெறவில்லை. சோஷியல் டிரிங்கராக தொடங்கி, முழு நேர குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் பலர் உள்ளனர். இதற்கு காரணம் என்ன?

எப்படித்தான் இவர்களை மீட்பது என்ற, இன்றைய நம் குடும்ப பெண்கள் பலரும் வேதனையுடன் கேட்க விரும்பும் கேள்வியை, கோவை கிருஷ்ணா மருத்துவமனை மனநல மருத்துவர் டாக்டர் பாலுவிடம் முன்வைத்தோம்.

அவர் கூறியதாவது:

உடல், சமுதாயம், சூழ்நிலை சார்ந்த நோய்தான், இந்த குடி மற்றும் போதைப்பழக்க நோய். இது திரும்ப, திரும்ப தாக்கக்கூடியது. இந்த நோய்க்கு, மருத்துவ சிகிச்சை எந்த அளவுக்கு அவசியமோ, அதை போல் சமுதாயத்தின் ஒத்துழைப்பு, சூழ்நிலை மாற்றங்கள், உறவுமுறை மேம்படுத்துதலும் முக்கியம்.

குடியில் இருந்து மீண்டவரின் மூளை நரம்புகளுக்குள் ஏற்பட்ட மாற்றம், உளவியல் மற்றும் சமுதாய மாற்றங்கள்,அவரை தினமும் சோதித்துக் கொண்டே இருக்கும். அந்த சோதனை, அவர்களை சீக்கிரமாக மனம் தளர செய்யும். அவர்களுக்கு மனவலிமை குறைவாகவே இருக்கும்.

சோர்வுக்கு குடி தீர்வல்ல!

மூளையில் ஏற்பட்ட உயிரியல் மாற்றங்கள், அந்த மனிதனுக்கு ஒரு நாளில் பலமுறை குடிக்க வேண்டும் என்ற, துாண்டுதலை ஏற்படுத்தும். அது, அந்த மனிதன் கையில் தவறு இல்லை. உளவியல் ரீதியாக மனம் சோர்ந்து போகும் போது, குடித்தால் சோர்வு குறையும் என்ற எண்ணம், பழக்கமாகி இருப்பதுதான் காரணம்.

குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டாலும், சுற்றியுள்ள குடிகார நண்பர்கள், அதை துாண்டி விடுகிறார்கள். குடிப்பழக்கத்துக்கு வைத்தியம் எடுத்து இருந்தாலும், அவர்களுக்கு அன்பு, அரவணைப்பு, ஊக்கம் ஆகியவை தேவைப்படுகிறது.

காக்கும் ஆல்கஹாலிக் அனானிமஸ்

குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டுவர, உலகளாவிய தன்னார்வ தொண்டு நிறுவனமாக 'ஆல்கஹாலிக் அனானிமஸ்' என்ற அமைப்பு உள்ளது.1935ம் ஆண்டு அமெரிக்காவில் துவக்கப்பட்டது இந்த அமைப்பு.

இன்று, இது கோவை மட்டுமல்லாமல், உலகத்தில் பல நாடுகளிலும் செயல்படுகிறது. குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்களை, இந்த அமைப்பு அதில் இருந்து மீட்டெடுக்கும். இந்த அமைப்பில் அனைத்தும் இலவசம்.

மதுவை கைவிட்டு, தெளிவான மனநிலையில் இருக்க விரும்பும் ஆண்களும், பெண்களும் ஒருவருக்கொருவர் உதவ, ஒன்றிணைந்து செயல்படுவதே, இந்த அகில உலக சங்கத்தின் நோக்கம். குடிப்பழக்கத்தை மறக்க விரும்பும் நபர்களுக்கு, இவர்கள் உதவுகிறார்கள்.

எப்படி திருந்துகின்றனர்

இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் அனைவரும், ஒரு காலத்தில் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்தவர்கள். ஒரு குடி நோயாளியை, சக நோயாளிதான் புரிந்து கொள்ள முடியும்.

இந்த அமைப்பில் சேரும் புதிய உறுப்பினர்கள், முதலில் ஒரு நாள் மட்டும் குடிப்பழக்கத்தை விடும்படி ஊக்குவிக்கப்படுகிறார்கள். பின்னர், படிப்படியாக குடிப்பழக்கத்தை கைவிட, ஆலோசனை வழங்குகின்றனர்.

கடவுளே மாற்ற முடியாதவற்றை, அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனநிலையும், நம்மால் மாற்றக்கூடியவற்றை மாற்றும் மனோபலத்தையும் பெறுதலே, இது போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபடும் வழி.

இவ்வாறு, டாக்டர் பாலு கூறினார்.

டாக்டர் பாலு,

மனநல மருத்துவர்,

94438 16656






      Dinamalar
      Follow us