sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/சோளக்கதிர் நாரில் மருத்துவ குணங்கள்!

சோளக்கதிர் நாரில் மருத்துவ குணங்கள்!

சோளக்கதிர் நாரில் மருத்துவ குணங்கள்!


PUBLISHED ON : பிப் 18, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 18, 2018


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாம் ஆசையாக விரும்பி வாங்கும் சோளக்கதிரை சுற்றி இருக்கும் நாரை வீணாக கீழே போட்டு விடுவோம். ஆனால் அந்த நாரில் ஏராளமான நன்மைகள் பொதிந்துள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?

இந்த நாரில் உள்ள, சிக்மாஸ்ட்ரோல் மற்றும் சிஸ்டோரோல் என்ற பொருள், இதய நோய்களிலிருந்து நம்மை காக்கிறது. உடல் கொழுப்பை குறைக்கிறது. இதிலுள்ள இயற்கை அமிலம் நமது வாயில் ஏற்படும் பிரச்னைகள், சரும ஆரோக்கியம் மற்றும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

சிறுநீர்ப்பை தொற்று, சிறுநீரக கற்கள், ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய நோய்கள், உடல் சோர்வு, சிறுநீரக அழற்சி போன்ற எண்ணிலடங்காத பிரச்னைகளை சரி செய்யும் மருந்தாக இது உள்ளது. இந்த நாரை பச்சையாகவோ அல்லது உலர வைத்தோ பயன்படுத்தி கொள்ளலாம்.

ரத்த சர்க்கரை அளவு: ரத்த அழுத்தம், டயாபடீஸ் போன்ற நோயாளிகளுக்கு சோளக்கதிர் சிறந்தது. இவை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து, இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. கொலஸ்ட்ரா லை குறைத்து இதயநோய் வராமல் தடுக்கிறது.

வைட்டமின் சி அளித்தல்: சோளக்கதிர், உடலுக்கு வைட்டமின் சி சத்தை கொடுக்கிறது. இதனால் உள்ளுறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து அவை நன்றாக செயல்பட உதவுகிறது. இதய நோய்களும் வராமல் தடுக்கிறது.

கவுட் பிரச்னையை குறைத்தல்: கவுட் என்பது ஒரு மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்னை ஆகும். அதிக அளவு யூரிக் அமிலம் மூட்டுகளில் தங்கும் போது அதிகமான வலி ஏற்படும். இதற்கு சோளக்கதிர் நாரில், தேநீர் தயாரித்து ஒரு நாளைக்கு இரண்டு முறை என்று குடித்து வந்தால், கவுட் வலி படிப்படியாக குறைந்து விடும்.

சிறுநீரக பிரச்னைக்கு உதவுதல்: சோளக்கதிர் நாரில் தயாரிக்கும் தேநீர், சிறுநீரக பிரச்னைகளான சிறுநீர்ப்பை தொற்று, சிறுநீரக கற்கள், சிறுநீரக அழற்சி போன்ற பிரச்னைகளை சரி செய்ய உதவுகிறது.

ஜீரண சக்தியை அதிகரித்தல்: கல்லீரலில் பித்த நீரை அதிகம் சுரக்க வைத்து, நாம் சாப்பிட்ட உணவை எளிதாக ஜீரணிக்க வைக்க, இந்த நார் உதவுகிறது. எனவே ஜீரண சக்தியை துரிதப்படுத்தி விடுகிறது.

ரத்தக்கசிவை கட்டுப்படுத்துதல்: இந்த நாரை கொண்டு தயாரிக்கப்படும், தேநீரில் உள்ள வைட்டமின் கே சத்து, ரத்தக்கசிவை தடுக்கிறது. அதிலும் கருவுற்ற பெண்களுக்கு, இது மிகவும் சிறந்தது. ஏதாவது வெட்டுக்காயங்கள், அடிபட்டால் ஏற்படும் ரத்தக்கசிவை தடுக்கிறது.

தலைவலியை குறைத்தல்: நீண்ட காலமாக உங்களுக்கு தலைவலி தொல்லை இருந்தால், அதற்கு சோளக்கதிர் நார், தேநீர் மிகவும் சிறந்தது. காரணம், இதில் அடங்கியுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் மற்றும் வலி நிவாரணி பொருள், தலைவலியை போக்குகிறது.

மன அழுத்தத்தை குறைத்து, ரத்த ஓட்டத்தை அதிகரித்து தோள்பட்டை, கழுத்து, தாடை பகுதியில் உள்ள விரைப்புத்தன்மையை போக்குகிறது. இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களான மெந்தால், தைமோல், செலினியம், நியாசின், பீட்டா கரோட்டீன், ரிபோப்ளவின் போன்றவை அடங்கியுள்ளன. இவை அனைத்தும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us