sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

இது இனிப்பான அலாரம்!

/

இது இனிப்பான அலாரம்!

இது இனிப்பான அலாரம்!

இது இனிப்பான அலாரம்!


PUBLISHED ON : பிப் 18, 2018

Google News

PUBLISHED ON : பிப் 18, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியாவில், எட்டு கோடி பேருக்கு 'ப்ரீ டயாபடிஸ்' என, புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

அதாவது, சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை. இதை கவனிக்காமல் விடுவதால் வருவது தான், சர்க்கரை நோய். இதுபோன்ற பாதிப்புகள் நமக்கு ஏற்படலாம் என்று, நம் உடல் செய்யும் அலர்ட் சிக்னலுக்கு சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை என்று பெயர் வைத்திருக்கின்றனர் மருத்துவர்கள்.

கணையத்தில் சுரக்கும் இன்சுலின் ஹார்மோன் தான் ரத்தத்தில் உள்ள குளுகோஸை, உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற்றுகிறது. ஒருவருக்கு போதிய அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்றால், அல்லது சுரக்கும் இன்சுலின் போதிய ஆற்றல் கொண்டதாக இல்லை என்றால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்துப் பிரச்னையை ஏற்படுத்தும். இதைத்தான் சர்க்கரை நோய் என்கிறோம்.

இதை நோய் என்று சொல்வதை விட ஒருவித குறைபாடு என்று சொல்வது தான் சரி. முந்தைய நிலை குறித்து, முறையான பரிசோதனைகள் மூலம் அறிந்து கொள்ளலாம். சர்க்கரை குறைபாடுக்கு முந்தைய நிலையை கண்டறிவதால், மருந்து, மாத்திரைகள், சிகிச்சைக்கான பணச் செலவு, நேரம் எல்லாம் மிச்சமாகும். வாழ்க்கை முறை மாற்றம் என்பது, உணவு முறை, உடற்பயிற்சி, மன ஆரோக்கியம் போன்றவற்றை உள்ளடக்கியது. சர்க்கரை குறைபாடு வருவதற்கு, அதிக உடல் எடை மிக முக்கியக் காரணம் என்பதால், மாற்றத்தால் அதை வெல்லலாம்.

வாழ்க்கை முறை மாற்றத்தின் முதல் அம்சம், உணவு. மூன்று வேளைகள் சாப்பிடவேண்டிய உணவை, ஆறு வேளைகளாக பிரித்து சாப்பிட வேண்டும். உடல் எடை கூடாதபடி, நம் ஆரோக்கியத்துக்கு தேவையான சத்துக்களை சரிவிகிதமாகச் சாப்பிட வேண்டியது அவசியம்.

உடல் எடை, ரத்த சர்க்கரையை அதிகரிக்கும் உணவுகளான, இனிப்பு வகைகள், கார்போஹைட்ரேட் அதிகமுள்ள பரோட்டா, கூழ், களி, பிஸ்கட், சாக்லேட், கேக், பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்கள், பழரசங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

உடல் எடை, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் ஊறுகாய், அப்பளம், உப்பு மிகுந்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும். முக்கியமாக, சர்க்கரை குறைபாடில் இருந்து விலகி வாழ, 'விருந்தும் வேண்டாம் விரதமும் வேண்டாம்' என்பதே, பின்பற்றவேண்டிய உணவுமுறைக் கொள்கை.

இரண்டாவது அம்சமான உடற்பயிற்சியில் எளிமையானது நடைப்பயிற்சி. வாரத்தில், ஐந்து நாட்களுக்கு, 30 நிமிடங்களுக்கு குறையாமல் தங்களால் முடிந்த வேகத்தில் நடப்பது போதுமான ஒன்று. நடைப்பயிற்சி, ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும், உடல் எடையை குறைத்து, எலும்புகளுக்கு வலிமை ஊட்டவும் உதவும்; இருதய ஆரோக்கியம் காக்கும். மனச்சோர்வு நீக்கி தூக்கம் வரவும் உதவும்.

மூன்றாவது அம்சம், மன ஆரோக்கியம். அதற்கு தெளிவான சிந்தனைகள், காலத்தை வீணாக்காமல் உரிய நேரத்தில் நம் கடமைகளை, வேலைகளை முடிப்பது, நண்பர்கள், குடும்பத்தாருடன் நேரம் செலவழிப்பது, உடற்பயிற்சி, ஆழ்ந்த தூக்கம், மது, புகைப்பழக்கம் தவிர்ப்பது போன்றவை இன்றியமையாதவை. இவற்றையெல்லாம் மேற்கொண்டால் நம் உடல் எடை 7 முதல் 10 சதவிகிதம் குறையும் வாய்ப்பு இருக்கிறது. சர்க்கரை குறைபாட்டிலிருந்து மட்டுமல்லாமல், அதன் தொடர் பாதிப்புகளான இதய பாதிப்பு, சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றிலிருந்தும் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us