sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

ஆஸ்துமா அவஸ்தைக்கு கிராம்பில் இருக்கு தீர்வு

/

ஆஸ்துமா அவஸ்தைக்கு கிராம்பில் இருக்கு தீர்வு

ஆஸ்துமா அவஸ்தைக்கு கிராம்பில் இருக்கு தீர்வு

ஆஸ்துமா அவஸ்தைக்கு கிராம்பில் இருக்கு தீர்வு


PUBLISHED ON : டிச 13, 2015

Google News

PUBLISHED ON : டிச 13, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிராம்பில் கார்போஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோபிளேவின், நயாசின், 'வைட்டமின் சி' போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து, எண்ணெய் எடுக்கப்படுகிறது.

கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்குவித்தல், தூண்டுதலை உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்குவதுடன், வயிற்றுப் பொருமலுக்கு மிகச்சிறந்த நிவாரணி. உடலைப் பருமனடையச் செய்யவும், வளர்ச்சிதை

பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும், இது பலன் அளிக்கிறது.

ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை, கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால், ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன. கிராம்புப் பொடியை வறுத்து, அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால், வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விரைக்கப் பண்ணும் ஒரு பொருள், வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து, வாந்தியைத் தடுக்கிறது.

நான்கு கிராம் கிராம்பை, மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு, அரை பங்காக சுண்டும் அளவுக்கு கொதிக்க வைத்து பருகினால், காலரா குணமடையும். சிறிது சமையல் உப்புடன், கிராம்பை சப்பிச் சாப்பிட்டால், தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை

சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன், தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச்சாறு சேர்த்து, படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட்டால், ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக்குழல் அழற்சி சரியாகும். முப்பது மில்லி நீரில், ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து,

அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

கிராம்புப்பொடியை, பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வந்தால், வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை, பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவி வந்தால், குணம் கிடைக்கும். 35 துளி நல்லெண்ணெயில், ஒரு கிராம்பை சூடு காட்டி, அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால், சுகம் கிடைக்கும். தøசப்பிடிப்புள்ள இடத்தில், கிராம்பு எண்ணெயைத் தடவி வந்தால், குணம் கிடைக்கும்.

கிராம்பு மற்றும் உப்பை, பசும்பாலில் அரைத்து, அந்த பøசயைத் தடவினால், தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை, உப்பு உறிஞ்சி எடுப்பதால், தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது. கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க, கிராம்பை நீரில் உரசி, அந்த நீரை பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

கறிகளுக்கு சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும், வாசனை சோப்புத் தயாரிப்பிலும், இது பயன்படுகிறது.






      Dinamalar
      Follow us