sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/உதடு வெடிப்புக்கு தேங்காய் எண்ணெய்

உதடு வெடிப்புக்கு தேங்காய் எண்ணெய்

உதடு வெடிப்புக்கு தேங்காய் எண்ணெய்


PUBLISHED ON : செப் 27, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 27, 2015


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

உதடு வெடிப்புகளால் எரிச்சல் ஏற்படுகிறதா? குளிர் காலத்தில் பலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்னையே இது.

குளிர்காலம் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. குளிர்காலத்தில் உங்கள் உதடுகள் வேகமாக வறண்டு போகிறதா? என்ன தான் வகை வகையான உதடு பாம்களை தடவியும், இந்த பிரச்னை தீரவில்லையா? என்ன செய்வது என்பதே புரியவில்லையா?

கவலையை விடுங்கள்.

நமக்கு கைகொடுக்க தான் இயற்கையான தேங்காய் எண்ணெய் இருக்கிறது. அதிலுள்ள பல்வேறு வகையான உடல்நல பயன்கள் இருப்பது, நம் அனைவருக்குமே தெரிந்ததுதான்.

தலைமுடியில் ஆரம்பித்து, பாதம் வரை அதை பயன்படுத்தலாம். அது நமக்கு அளித்திடும் பல பயன்களில் ஒன்று தான் உதடு வெடிப்பிற்கான தீர்வு.

பொதுவாகவே நம் உடலில் வெட்டுக்காயம் ஏதேனும் ஏற்பட்டால், வீட்டில் உள்ள பெரியவர்கள் உடனே தேங்காய் எண்ணெயை அங்கே தடவ சொல்லுவார்கள். அதற்கு காரணம், அதிலுள்ள குணப்படுத்தும் ஆற்றலே. ஏற்கனவே சோதிக்கப்பட்டு, ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன், 1 டீஸ்பூன் உப்பை கலந்து ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொண்டு இந்த ஸ்க்ரப்பை தயாரிக்கலாம். பஞ்சுருண்டையை கொண்டு இந்த கலவையை, உதட்டில் தடவிக் கொள்ளுங்கள்.

பின் உதட்டின் மீது விரல்களை கொண்டு வட்ட வடிவில் ஒரு நிமிடத்திற்கு மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.

சிறிது நேரம் கழித்து, உங்கள் உதடு மென்மையாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். இறுதியில் ஒரு துணியை கொண்டு உதட்டை துடைத்து விட்டு அதனை காய வையுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us