தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மாதவிடாய் வலியை அதிகரிக்கும் காபி!

மாதவிடாய் வலியை அதிகரிக்கும் காபி!

மாதவிடாய் வலியை அதிகரிக்கும் காபி!


PUBLISHED ON : பிப் 19, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 19, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வளர் இளம் பருவத்தில் உள்ள, 90 சதவீத பெண் குழந்தைகளுக்கு, மாதவிடாய் சமயத்தில் வலி ஏற்படுகிறது; இதனால் பள்ளிக்கு செல்ல முடியாமல் இருக்கின்றனர்.

மாதவிடாய் ரத்தப் போக்கின் போது, 'புரோஸ்டாகிளான்டின்' என்ற வேதிப் பொருள், அழற்சியை ஏற்படுத்துவதால் வலி ஏற்படுகிறது.

'ஒமேகா 6' கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவுகள், இந்த வேதிப்பொருளை அதிகம் சுரக்கச் செய்து, வலியை மேலும் அதிகரிக்கச் செய்யும். இதற்கு பதிலாக, 'ஒமேகா 3' கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள உணவை சாப்பிட்டால், புரோஸ்டாகிளான்டின் வேதிப் பொருளால் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவும்.

இறைச்சி, சுத்திகரிக்கப்பட்ட உணவுகள், காபி, அதிக சர்க்கரை உள்ள உணவுகள், உப்பு, எண்ணெய் போன்றவை அழற்சியை அதிகப்படுத்தும்.

பழங்கள், காய்கறிகள், மீன், நட்ஸ், விதைகள், ஆலிவ் எண்ணெய் போன்றவை அழற்சியை குறைக்கும். விலங்குகளின் இறைச்சி, பால் பொருட்களை தவிர்த்த, 'வீகன் டயட்' பின்பற்றினாலும் அழற்சி குறையும்.

- நார்த் அமெரிக்கன்

மெனோபாஸ் சொசைட்டி


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us