PUBLISHED ON : பிப் 11, 2018
தயிர் சாப்பிட்டால் சூடு. மோர் உடலுக்கு குளிர்ச்சி. மாம்பழமும் பப்பாளியும் சூட்டைக்கிளப்பும். வாழைப்பழம் குளிர்ச்சி தரும். இப்படி நாம் சாப்பிடுகிற உணவுகளில் சிலவற் றை, சூடு என்றும், சிலவற்றை குளிர்ச்சி என்றும் சேர்த்துக் கொள்கிறோம் அல்லது ஒதுக்குகிறோம். உண்மையில், உணவுப் பொருட்கள், உடலின் வெப்பநிலையை மாற்றுமா? அதனால், நோய்கள் உண்டாகுமா?
உண்ணும் உணவு, சூடாகவோ, குளிர்ச்சியாகவோ இருப்பதை பொறுத்தே, உடலின் வெப்பநிலையில் மாற்றங்கள் உண்டாகும். உதாரணமாக, குளிரான காலநிலையில், ஒரு கப் தேநீர் அருந்தினால் இதமாக இருக்கும். வெயில் அதிகமாக இருக்கும்போது குளிர்ச்சியான பழச்சாறு அருந்துவது உடலுக்குப் புத்துணர்ச்சி தரும்.
அறுசுவைகளில், இனிப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகிய மூன்றும், உடலுக்கு குளிர்ச்சி தரும். புளிப்பு, உப்பு, கார்ப்பு ஆகியவை, உடல் சூட்டை அதிகரிக்கும். ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் ஒவ்வொரு விதமான சுவை உண்டு.
இனிப்பு சுவை நிறைந்த உணவு பொருள்கள்: அரிசி, கோதுமை, பார்லி, தானியங்கள், வெண்ணெய், நெய், வாழைப்பழம், மாம்பழம், கேரட், பீட்ரூட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வெல்லம், பதநீர், இளநீர் போன்றவை.
புளிப்பு: எலுமிச்சை, நாரத்தை, புளி, தயிர், ஆரஞ்சு, வினிகர், சோயா சாஸ்.
உப்பு: நட்ஸ், உப்பு, சில கடல் தாவரங்கள்.
கார்ப்பு: மிளகு, திப்பிலி, சுக்கு, இஞ்சி, வெள்ளைப்பூண்டு, மிளகாய்.
கசப்பு: கீரைகள், டீ, காபி, பாகற்காய்,
கத்தரிக்காய், மஞ்சள், வெந்தயம், ஆலிவ்.
துவர்ப்பு: பீன்ஸ், பருப்பு வகை, மாதுளம்பிஞ்சு, புரோக்கோலி, காலிப்ளவர், டர்னிப்.

