தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பீட்ரூட் சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை அதிகமாகுமா?

பீட்ரூட் சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை அதிகமாகுமா?

பீட்ரூட் சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை அதிகமாகுமா?


PUBLISHED ON : பிப் 11, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 11, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பீட்ரூட், சர்க்கரைவள்ளி போன்ற கிழங்குகளில் இனிப்புத்தன்மை கூடுதலாக இருக்கும் என்பதால், அப்படிச் சொல்லப்படுகிறது. உண்மையில், மற்றவற்றைப்போல இதுவும் ஒருவகைக் கிழங்கு. அவ்வளவே!

பீட்ரூட்டில் இருக்கும் நன்மைகள் ஏராளம்.

உதாரணமாக, கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கும், குழந்தை உருவாக்கத்துக்கும் பெரிதும் உதவும் ஃபோலிக் அமிலத்தை (Folic acid) பீட்ரூட் அதிகமாகத் தரும். சருமம் தொடர்பான பிரச்னைகளைச் சரிசெய்யும். நோய் கட்டுக்குள் இல்லாதவர்கள், எந்தக் கிழங்கு வகையை உட்கொண்டாலும் ஆபத்துதான்.

கிழங்குகளினால் கிடைக்கும் நன்மைகள் ஏராளமாக இருந்தாலும், மற்றொரு புறம் சில தீமைகளும் இருக்கின்றன. சரியான மருத்துவப் பரிந்துரையின்றி அளவுக்கதிகமாக கிழங்குகளைச் சாப்பிடுவது, தவறான புரிந்துகொள்ளல் காரணமாகச் சாப்பிடாமலே இருப்பது, தவறான நேரத்தில் சாப்பிடுவது எனக் கிழங்கு பற்றிய பல குழப்பங்கள் இன்றைக்கு இருக்கின்றன.

கிழங்கை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. புரதத்துக்கும், நார்ச்சத்துக்கும், வைட்டமின்களுக்கும் மாத்திரைகள் உருவாகிவரும் இந்தக் காலகட்டத்தில், இயற்கையாக கிடைக்கும் சத்துகளை ஒதுக்கிவிட வேண்டாம். அளவுக்கு மீறாமல், சரியான நேரத்தில், சரியான விகிதத்தில் சாப்பிட்டு வந்தால் கிழங்கைப் போன்ற ஆரோக்கியமான உணவு வேறெதுவும் இல்லை..!

உப்பு சேர்த்து கிழங்கு சாப்பிடுவதால் அசிடிட்டி ஏற்படுமா?

உணவில் தேவைக்கு அதிகமான அளவில் உப்பு சேர்த்துக்கொண்டால், அசிடிட்டி, சிறுநீரகத்தில் கல் போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பது உண்மை; அதேபோல, கிழங்குகளில் இருக்கும் கலோரிகள், வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால், சாப்பிடும் அளவைப் பொறுத்துதான் இந்தப் பிரச்னை உருவாகும். சரியான அல்லது குறைந்த அளவில் உட்கொண்டால், அசிடிட்டி, அது தொடர்பான நெஞ்செரிச்சல் என எந்தப் பிரச்னையும் ஏற்படாது.

கிழங்கை வெறும் வயிற்றில் சாப்பிடுவது, மசாலா அதிகம் சேர்த்து வறுத்துச் சாப்பிடுவது, உடலுழைப்பு இல்லாமல் அதிகமாக உட்கொள்வது போன்ற பழக்கங்கள்தான் அசிடிட்டி பிரச்னையை ஏற்படுத்தும்.

எடையை அதிகரிக்க கிழங்குகள் உதவுமா?

கிழங்குகளை பொறுத்தவரை, கார்போஹைட்ரேட் அளவைவிட கலோரியின் அளவே அதிகமாக இருக்கும். கார்போஹைட்ரேட்தான் எடையை அதிகரிக்கும். எடையைக் குறைக்க விரும்புகிற பலரும், இதுபற்றிச் சரியான புரிந்துகொள்ளல் இல்லாமல், அனைத்து வகைக் கிழங்குகளையும் தவிர்த்துவிடுகிறார்கள். குறிப்பாக, பேலியோ டயட் (Paleo diet) முறையைப் பின்பற்றுபவர்கள், முற்றிலுமாகத் தவிர்ப்பதும் உண்டு.

சரியான விகிதத்தில் கிழங்கைச் சாப்பிட்டால், எடை மாற்றங்கள் ஏற்படாது. உடல் எடையை அதிகரிக்க விரும்புகிறவர்கள் பூரிக்கிழங்கு சாப்பிடலாம்; குழம்பு வகைகளில் உருளைக்கிழங்கைச் சேர்த்துக்கொள்ளலாம்; வறுத்த கிழங்குகளைச் சாப்பிடலாம். இவை உடல் எடை அதிகரிக்க உதவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us