தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கிழங்குகள் தரும் நன்மைகள்!

கிழங்குகள் தரும் நன்மைகள்!

கிழங்குகள் தரும் நன்மைகள்!


PUBLISHED ON : பிப் 11, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 11, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குழந்தைகளின் வளர்ச்சியில் கிழங்குகளுக்கு அதிகப் பங்கு உள்ளது. ஏராளமான தாதுப் பொருள்கள், எக்கச்சக்கமான வைட்டமின் சத்துகள், நார்ச்சத்துகள் எனச் சத்துகளின் உறைவிடமாகக் கிழங்குகள் இருக்கின்றன. மரவள்ளிக்கிழங்கு, சேப்பக்கிழங்கு, சேனைக்கிழங்கு போன்ற கிழங்குகளை வேகவைத்து குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுப்பது சிறந்தது.

பரிமாண வளர்ச்சியை மேம்படுத்துவதில், கிழங்குகளுக்குப் பெரிய பங்கு உண்டு.

கிழங்கு, கார்போஹைட்ரேட் நிறைந்தது. அளவுக்கு மீறி உட்கொண்டால், செரிமான பிரச்னை, வாய்வுத் தொல்லைகள் ஏற்படும். ஏதாவது நோய்க் குறைபாடு இருப்பவர்கள், தகுந்த மருத்துவ ஆலோசனை இல்லாமல் கிழங்குகளைத் தொடர்ச்சியாக சாப்பிடவே கூடாது.

குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், உடலுழைப்பு அதிகமில்லாதவர்கள், குடலில் பாதிப்பு இருப்பவர்கள், மூட்டுப் பிரச்னை இருப்பவர்கள் உஷாராக இருக்க வேண்டும். சிலர் சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு என ஏதாவது ஒரு கிழங்கை அதிகம் விரும்பிச் சாப்பிடுவார்கள். அப்படி ஒன்றை மட்டும் சாப்பிடுவதும் பாதிப்பை ஏற்படுத்தலாம். புரதச்சத்துகள் நிறைந்த காய்களோடு சேர்த்துக் கிழங்கைச் சாப்பிட்டுப் பழக வேண்டும்.

'இவர்கள் கிழங்கு சாப்பிடலாம், 'இவர்கள் சாப்பிடக் கூடாது என்ற யாரையும் குறிப்பிட்டு ஒதுக்கிவிட முடியாது. சர்க்கரை நோயாளிகள், இதய பாதிப்பு உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கிழங்குகள் சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்த பிரச்னை உள்ளவர்கள், கிழங்கு விரும்பிகளாக இருக்கும்பட்சத்தில் ஊட்டச்சத்து நிபுணரிடமும், சம்பந்தப்பட்ட நோயின் சிறப்பு மருத்துவரிடமும் ஆலோசனை பெற்று, அதற்கேற்றபடி கிழங்கு சாப்பிடலாம்.

ஆனால், வெகுசிலருக்கு மட்டுமே ஏற்படுத்தும். அவரவரின் சரும அமைப்பை பொறுத்துதான் பாதிப்பு ஏற்படும். முதன்முறை சாப்பிட்டு சரும ஒவ்வாமை ஏற்பட்டால், சிலர் அந்தக் கிழங்கை சாப்பிடுவதையே நிறுத்திவிடுவார்கள். அது தவறு. சில கிழங்குகளை நாள்பட நாள்பட உடலும் சருமமும் ஏற்றுக்கொள்ளும். மீண்டும் மீண்டும் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஒவ்வாமை தொடர்ந்தால், சரும மருத்துவரை அணுகவும்.

கிழங்குகள் செரிமானம் ஆவதற்கு அதிக நேரமும், அதிக உழைப்பும் தேவைப்படும். இரண்டில் எது குறைந்தாலும் செரிமானத்தில் பாதிப்பு ஏற்படும். கிழங்கு வகைகளைச் சாப்பிட்டவுடன், தேவையான அளவு தண்ணீர் குடிக்கவேண்டியது அவசியம். சிறிதளவு சீரகம், பெருங்காயம் சேர்த்து வேகவைக்கப்பட்ட கிழங்குகளைச் சாப்பிடுவது, செரிமானக்கோளாறுகள் ஏற்படாமல் காக்கும். சாப்பிட்டவுடன் சிறிது நேரம் நடப்பது, வேலை செய்வது, உடலுழைப்பைச் சற்று அதிகப்படுத்துவது போன்றவற்றின் மூலம் செரிமானக் கோளாறுகளைத் தவிர்க்கலாம்.

உருளையின் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச்சத்து அனைத்தும் அதிக உடலுழைப்பு செய்பவர்களுக்குப் பிரச்னையை ஏற்படுத்தாது. குழந்தைகளுக்கு அதிக உடலுழைப்பு இருக்குமென்பதால் பிரச்னை இல்லை. பெரியவர்களும் அதிக உடலுழைப்பை இப்போதெல்லாம் தருவதில்லை. அதே நேரத்தில், உருளைக்கிழங்கை எந்த வடிவில் சாப்பிடுகிறோம் என்பதும் மிக முக்கியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us