PUBLISHED ON : ஆக 12, 2012

நாம், 40 வயதை கடந்து விட்டாலே, ரத்த ஓட்டம் குறையும். சர்க்கரை நோயாலும், ரத்தநாளம் சுருங்கி, ரத்த ஓட்டம் பாதிக்கும். இதனால் பல்வேறு வித மூட்டு வலி, தோள் பட்டை வலி பிரச்னைகள் உருவாகும். சிலருக்கு
தோள்பட்டையை மேலே தூக்கினால் வலி ஏற்படும். நம் நாட்டில், ஏழில் ஒருவருக்கு, தோள்பட்டை வலி உள்ளது. ''இந்தியாவில் ஏழு பேரில் ஒருவருக்கு, தோள்பட்டை வலி உள்ளது. தொடர்ந்து வலி இருந்தால் ரத்தமின்றி அறுவை சிகிச்சை செய்யும், நவீன, 'நுண்துளை அறுவை சிகிச்சை' முறைகள் தற்போது உள்ளன,'' என்கிறார், மதுரை அப்பல்லோ மருத்துவமனை மூட்டு நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் கே.என்.சுப்பிரமணியன்.
இவர் ஆர்த்ரோஸ்கோப்பி, ஆர்த்ரோபிளாஸ்டி, தோள்பட்டை அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்று, மூட்டு எலும்பு சிகிச்சையில் எப்.ஆர்.சி.எஸ்., பெற்றவர். வெளிநாடுகளில் பணிபுரிந்து விட்டு, தற்போது மதுரையில் சிகிச்சை அளிக்கிறார்.
தோளைத் தூக்கினால் வலி இன்று நம் அனைவருக்கும் இருக்கும் அடிப்படை பிரச்னைகளான தோள்பட்டை வலி, மூட்டு வலி, முழங்கால் வலி பிரச்னைகள் தொடர்பாக விளக்குகிறார்...
நாம், 40 வயதை கடந்து விட்டாலே, ரத்த ஓட்டம் குறையும். சர்க்கரை நோயாலும், ரத்தநாளம் சுருங்கி, ரத்த ஓட்டம் பாதிக்கும். இதனால் பல்வேறு வித மூட்டு வலி, தோள் பட்டை வலி பிரச்னைகள் உருவாகும். சிலருக்கு தோள்பட்டையை மேலே தூக்கினால் வலி ஏற்படும். நம் நாட்டில், ஏழில் ஒருவருக்கு, தோள்பட்டை வலி உள்ளது. தோள்பட்டையில் உள்ள நீர் சுரப்பி, புண் ஆகி இருக்கும். இவற்றை எல்லாம், ஆரம்ப கட்டத்தில் மருந்து மூலம் தற்காலிகமாக குணப்படுத்தலாம். தொடர்ந்து வலி இருந்தால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். சிலருக்கு தோள்பட்டை எலும்பு, இயற்கையாகவே வளைந்து இருக்கும். இதை நேராக்க, மருந்து இல்லை. இதற்கும் அறுவை சிகிச்சையே தீர்வு.
திறக்க வேண்டாம் முன்பு போல, தோள்பட்டை பகுதியைத் திறந்து, அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இல்லை. தற்போது அதிநவீன, 'நுண்துளை அறுவை சிகிச்சை' வந்து விட்டது. தோள்பட்டையில் எந்த இடத்தில், சிறு பிரச்னை இருந்தாலும், 'கேமரா' மூலம் தெளிவாக அறிந்து சிகிச்சை செய்யலாம். ஒருநாளில் அறுவை சிகிச்சை முடிந்து, ஒரு வாரத்தில் வழக்கமான பணியை தொடரலாம். வலியும் மிகக்குறைவு. ரத்தக்கசிவு இல்லை. பழைய முறை சிகிச்சைக்கு, எட்டு வாரம் வரை நாம் ஓய்வில் இருக்க வேண்டும். விபத்துகளில் தோள்பட்டை விலகி, சிகிச்சை பெற்று, மீண்டும் விலகாமல் இருக்கவும் இந்த நுண்துளை அறுவை சிகிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது. சிலருக்கு, தோள்பட்டையை அசைத்தாலே வலி வரும். இரவில் தூங்கும் போது, சுற்றியுள்ள தசைகள், 'ரிலாக்சாக' இருக்கும். அப்போது, சிலருக்கு தோள்பட்டை விலகும். தோள்பட்டைக்கும், கழுத்திற்கும் இடைப்பட்ட எலும்பு விலகினால், 'மெட்டல் பட்டன்' மூலம் இணைக்க வேண்டும்.
தசைநார் விலகல்: நாம் நேராக நடக்கும் போது, திரும்பும் போது, கீழே விழுவது போன்ற உணர்வு ஏற்பட்டால், முழங்கால் வலுவில்லாமல் உள்ளது என உணர்ந்தால், மூட்டு திடமாக இல்லை என உணர்ந்தால், தசை நார் விலகி இருக்கிறது என்று அர்த்தம். முழங்கால் மூட்டு இணைப்பு தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டால், முன்பு, 13 செ.மீ., அளவிற்கு திறந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. சாதாரண வாழ்வுக்கு நாம் திரும்ப, மூன்று மாதம் ஆகும். நவீன நுண்துளை முறையில், அரை செ.மீ., அளவிற்கு இரண்டு துளை, 2 செ.மீ., அளவிற்கு ஒருதுளையிட்டு அறுவை சிகிச்சை செய்யலாம். நான்கு வாரத்தில் ஓடலாம்.
ஜவ்வும் கிழியும்: முதுமையால் மூட்டு தேய்மானம் ஆகும். இயற்கையாகவே, ஜவ்வில் ரத்த ஓட்டம் கிடையாது. ஜவ்வு கிழிந்து மூட்டு விலகும். செயற்கை மூட்டு வைத்தாலும், 10 ஆண்டு கழித்து மாற்ற வேண்டும். மூட்டு மாற்று சிகிச்சை இல்லாமல், இயற்கையாகவே ஜவ்வை வளர வைக்க வேண்டும் என்பதற்கு ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். நோயாளிகள் வலி இல்லாமல், சந்தோஷமாக சிகிச்சை முடிந்து செல்ல வேண்டும். நுண்துளை சிகிச்சை நிபுணர்கள் நமது நாட்டில் குறைவு; போதிய வசதிகள் உள்ள மருத்துவமனைகளும் குறைவு. இதனால், பொதுமக்களிடமும் போதிய விழிப்புணர்வு இல்லை. இவ்வாறு கூறினார்.
தொடர்புக்கு 98941 03259