sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/உடலுக்கு குளிர்ச்சி

உடலுக்கு குளிர்ச்சி

உடலுக்கு குளிர்ச்சி


PUBLISHED ON : ஏப் 02, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 02, 2017


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மாதுளம்பழத்தோலை பொடி செய்து, அதனுடன் சம அளவு பயத்தம் பருப்பை கலந்து, குளித்தால், வியர்வை துர்நாற்றம் நீங்கும்; உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும்.

மாதுளம்பழ தோலைப் பொடித்து, நீர் விட்டுக் குழைத்து, சருமம், தலையில் தேய்த்து, 10 நிமிடங்கள் கழித்து குளித்தால், முகப்பரு உட்பட சருமப் பிரச்னைகள், முடி உதிர்தல் நீங்கும்.

எலுமிச்சை தோல், ஆன்டிஆக்சிடன்டாக செயல்படுகிறது. சிலருக்கு கை, கால் முட்டிகளில் கருப்பாக இருக்கும். எலுமிச்சை தோலை தேய்த்து வர, கருமை நீங்கி, நல்ல பலன் கிடைக்கும்.

பொடுகு இருப்பவர்கள், எலுமிச்சைப்பழ தோலை நன்கு கசக்கி, தலையில் தேய்த்து, 10 நிமிடங்கள் ஊறவைத்து குளித்தால், பொடுகு குறைந்து, சில வாரங்

களில் பலன் தெரியும்; நகங்கள் மீது தேய்க்க பளபளப்பு கிடைக்கும்.

மீதமாகும் எலுமிச்சை பழ தோலை, பாத்திரங்கள் கழுவ பயன்படுத்தினால், பாத்திரங்கள் வாசனையாக இருக்கும்.

மாம்பழ தோலை கூழாக்கி, அதனுடன் பால் கலந்து சருமத்தில் தடவி வந்தால், பொலிவாகும். இதனுடன், சிறிது தேன் கலந்து, கழுத்தில் கருமையாக இருக்கும் பகுதிகளில் தடவினால், நல்ல பலன் கிடைக்கும்.

ஆரஞ்சுப்பழ தோலை, பாத வெடிப்புகளில் பூசி வந்தால், ஒரு வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

ஆரஞ்சுப் பழ தோல் பொடியுடன், சிறிதளவு பால், தயிர் சேர்த்து, பேஸ்பேக் போல பயன்படுத்த, பொலிவிழந்த முகம் களைகட்டும். ஆரஞ்சு தோலில் இருந்து சாறு எடுத்து, முகத்துக்கு பூசிவர கரும் புள்ளிகள் நீங்கி, முகம் பளபளப்பாக மாறும்.

ஆரஞ்சு பழத்தோலை, பல்லில் தேய்த்து வர, மஞ்சள் தன்மை நீங்கி பற்கள் பளிச்சிடும். பல் கூச்சத்தை நீக்கும் தன்மை கொண்டது. இதை வீட்டில் வளர்க்கும் செடி, தாவரங்களுக்கு உரமாகவும் பயன்படுத்தலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us