sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/தேகத்துக்கு பலம் தரும் சாறு

தேகத்துக்கு பலம் தரும் சாறு

தேகத்துக்கு பலம் தரும் சாறு


PUBLISHED ON : மார் 26, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 26, 2017


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோடை வெயில் தகிக்கும் போது, உடலில் நீர்ச்சத்து குறைவது இயற்கை. இதற்கு, உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, இளநீர், மோர், பழச்சாறு போன்ற பானங்களை அருந்தலாம். பழச்சாறுடன், தேன் கலந்து சாப்பிட்டால், பல நோய்கள் தீரும்.

ஆப்பிள் பழச்சாறு: உடல் சோம்பலாக, களைப்பாக இருக்கும் போது அருந்தலாம். ஆப்பிள் பழச்சாறுடன் தேனும், பொடித்த ரோஜா இதழ், ஏலக்காய் ஆகியவற்றை கலந்து அருந்த, ரத்தசோகை குணமாகும்.

கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றை அருந்த, பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி, உடற்பலம் பெருகும். கோடைக்கு ஏற்றது இப்பழச்சாறு.

திராட்சை சாறு: தொடர்ந்து அருந்தி வந்தால், ரத்த அழுத்த குறைவு, நரம்பு தளர்ச்சி, அல்சர், காமாலை, வாயு கோளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும். சாறுடன், தேன் கலந்து உண்டு வந்தால், ரத்த விருக்தி அடைந்து, உடல்பலம் அதிகரிக்கும். நீரிழிவு வியாதிக்கு, சர்க்கரை சேர்க்காத சாறு மிகவும் நல்லது.

அத்திப்பழச் சாறு: சாறு பிழிந்து, சுவைக்காக தேங்காய் பாலும் தேனும் கலந்து அருந்தலாம். இச்சாறு, எலும்பு முறிவு உள்ளவர்களுக்கு மிக்க பலன் தரும். அத்திப்பழமும், தேனும் கலந்து கல் உப்புடன் சேர்த்து உட்கொள்ள ஆரம்பகாலச் சிதைவுகளை சரி செய்யலாம். ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைவு ஆகியவற்றுக்கு, சிறந்த நிவாரணம்.

ஆரஞ்சு சாறு: ஆரஞ்சு பழச்சாறு அருந்துபவர்களுக்கு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எளிதில் ஜீரணம் செய்ய தகுந்தது. இருதய நோய்கள் எளிதில் குணமாகும். டைபாய்டு, ஜுரம் ஆகியவை குணமாகும். ஆரஞ்சு சாறுடன், இளநீர் கலந்து அருந்துவதால், சிறுநீர் தாராளமாக வெளியேறும். சிறுநீரக குறைபாடு குணமாகும். குழந்தைகளுக்கு கொடுக்க, குடல் பலம் பெருகும். எலுமிச்சை சாறு கலந்தும் அருந்தலாம்.

எலுமிச்சை சாறு: பாத்திரங்களில் உள்ள அழுக்கை நீக்க மட்டும் எலுமிச்சை பயன்படுவதில்லை. நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்றவும் பயன்படுகிறது. எலுமிச்சை சாறுடன், தேன் கலந்து அல்லது வெல்லம் கலந்து ஒரு பழத்துக்கு, அரை லிட்டர் நீர் கலந்து அருந்த வேண்டும்.

தொடர்ந்து அருந்தி வந்தால், மூல நோய், வயிற்று கடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள் குணமாகும். ஆனால், அளவுக்கதிகமாக இதை அருந்தும் போது குடல் தன் பலத்தை இழக்க நேரிடும். இளநீருடன் கலந்து அருந்துவதால் டைபாய்டு நோய் குணமாகும்.

தக்காளி சாறு: தக்காளி சாறை, நாள்தோறும் காலையில் குடித்து வந்தால், உடல் வலிமை அதிகமாவதுடன், வேண்டாத சதைகளும் குறையும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். சாறுடன், தேன் கலந்து உண்டுவர, ரத்தம் சுத்தமாகும். தோல் நோய்கள் குணமாகும்.

முள்ளங்கி சாறு: மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும், ஒரு டம்ளர் முள்ளங்கி ஜூஸ் குடித்து வந்தால், விரைவில் நோய் குணமாகும். தொடர்ந்து குடித்து வந்தால், வெகுநாளாக சரியாகாத மூலநோய் கூட, பூரணமாக குணமடைய வாய்ப்புள்ளது.

குழந்தைகளுக்கு, சிறு வயதிலிருந்தே முள்ளங்கியை உணவில் சேர்த்து வந்தால் ஞாபக சக்தி பெருகும், மூளை சிறந்த வளர்ச்சி அடையும். முடி உதிர்தல் மற்றும் பொடுகுத்தொல்லை போன்ற பிரச்னைகளுக்கு, முள்ளங்கி சாறு நல்ல தீர்வு தருகிறது.

தைராய்டு கோளாறுகள் இருப்பவர்கள், சிவப்பு முள்ளங்கி சாறு குடிக்கலாம். ஆன்ந்தோசயனின் மற்றும் போலிக் ஆசிட் நிறைந்துள்ளதால், புற்றுநோயை எதிர்த்து போராடுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us