sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/தினமும் தரும் பலன்!

தினமும் தரும் பலன்!

தினமும் தரும் பலன்!


PUBLISHED ON : ஜூலை 02, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 02, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உணவு வகைகளில், ருசிக்காகவும், மணத்துக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை, பலர், சாப்பாட்டு தட்டில் ஓரங்கட்டுகின்றனர். ஆனால், உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான சத்துக்கள், ஏராளமான அடங்கியுள்ளன. கறிவேப்பிலையில், கார்போஹைட்ரேட்டுகள், பைபர், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், விட்டமின்கள் அமினோ அமிலங்கள், கிளைக்கோசைடுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

கறிவேப்பிலையில் இரண்டு வகை உண்டு, அவை நாட்டு கறிவேப்பிலை, காட்டு கறிவேப்பிலை. நாட்டு கறிவேப்பிலை உணவாகவும், காட்டு கறிவேப்பிலை மருந்தாகவும் பயன்படுகிறது. காட்டு கறிவேப்பிலையின் இலை சற்றுப் பெரிதாகவும், கசப்பு அதிகம் உள்ளதாகவும் இருக்கும். நாட்டுக் கறிவேப்பிலை இலை, இதை விட சிறியதாகவும், இனிப்பும், துவர்ப்பும் நறுமணமும் உள்ளதாகவும் இருக்கும்.

வயிற்றுக்கு இதம்: கறிவேப்பிலையில், நீர்ச்சத்து, 0.66, புரதம், 6.1, கொழுப்பு, 0.1, மாவுச்சத்து, 0.16, நார்ப்பொருள், 6.4, தாது உப்புக்கள், 4.2 சதவீதம் உள்ளன. வைட்டமின் 'சி' 'ஏ' ஆகியவையும் உள்ளன. ஒரு டம்ளர் நீரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அதில், ஒரு கட்டு இலைகளை சேர்த்து,

2 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி, அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

கறிவேப்பிலையை அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி, அதை ஒரு டம்ளர் மோருடன் கலந்து, ஒரு நாளைக்கு, 2 முறை குடிக்க வேண்டும். ஒரு டம்ளர் நீரில் கறிவேப்பிலையை போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த நீரை தினமும் பலமுறைகள் குடிக்க வேண்டும்.

சிறிதளவு கறிவேப்பிலை பொடி, 10 கிராம் சீரகத்தை ஒன்றாக கலந்து சாப்பிட்டவுடன், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும். சிறிதளவு நீரில் கறிவேப்பிலை, சிறிது உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து அதை வடிகட்டி, அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்க வேண்டும். இப்படி குடித்து வந்தால், வயிற்றில் உள்ள, தேவையில்லாத கிருமிகள் அழிவதோடு, உடலுக்கும் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தி தருகிறது.

பார்வைக்கு நல்லது: கறிவேப்பிலையில் உள்ள ஆல்கலாய்டுகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்டுகள், புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. முடியின் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது. எனவே, இளநரை, முடி உதிர்வு மற்றும் கண் தொடர்பான பிரச்னைகளை வராமல் தடுக்கிறது. ஆன்டிபாக்டீரியல், வாய்வு தொல்லை, பித்தம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளை சரிசெய்து, வயிற்றில் நோய்த் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுத்து, வயிற்றை சுத்தமாக்க உதவுகிறது.

கருவேப்பிலை இலைச் சாற்றுடன் சிறிதளவு எலுமிச்சை சாறும் தேவையான அளவு சர்க்கரையும் கலந்து அருந்தி வர, அஜீரண வாந்தி முதலியவைகளுக்கு நல்ல குணம் தரும். பரம்பரை நீரழிவுக்கும், உடல் பருமன் காரணமாக ஏற்பட்ட நீரழிவுக்கும், தினமும் பத்து கருவேப்பிலை இலைகளை காலையில் மட்டும் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்.

கருவேப்பிலையின் சாறு கண்களைப் பாதுகாத்து ஒளி ஊட்டி, கண்புரை ஏற்படாமல் தடுக்கிறது. இதன் இலை, பட்டை, வேர் இவைகளை கஷாயம் செய்து குடித்தால், பித்தம், வாந்தி நீங்கும். நிழலில் உலர்த்திய கறிவேப்பிலையுடன், மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவற்றை பொடியாக்கி சோற்றுடன்

நெய் கலந்து சாப்பிட, மந்த பேதி, மலதோஷம், மலக்கட்டு போன்ற நோய்கள் குணமாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us