sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/சிறிதளவு வேப்பிலை போதும்

சிறிதளவு வேப்பிலை போதும்

சிறிதளவு வேப்பிலை போதும்


PUBLISHED ON : ஜூலை 02, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 02, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிலருக்கு உடலில் பலவித அலர்ஜிகள் ஏற்படும். அவை தோல் வியாதி, புழுதிக்கு அலர்ஜி என பல வடிவங்களில் உள்ளன. இவை அனைத்துக்கும், எளிய நிவாரணம், வேப்ப இலையை நன்கு அரைத்து உடலில் பூசி, ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும். அதோடு, காலையில் வேப்பங்கொழுந்தை அரைத்து, உருண்டை செய்து, தேனில் நனைத்து விழுங்க வேண்டும். இதனால் உடலில் ஏற்படும் எந்தவித அலர்ஜியும் காணாமல் போகும்.

கொழுந்து இலைகளில் தான் கசப்புத்தன்மை குறைவாக இருக்கும். அதற்கும் மீறி கசந்தால், தேனில் நனைத்து நாவில் படாமல் நேரடியாக தொண்டையில் போட்டு விழுங்கி விடுங்கள். இதன் நன்மை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு கிடைக்கும் அதிக சக்தி, புத்துணர்ச்சி மூலம் உங்களுக்குப் புரிந்து விடும். பித்த பிரச்னை மற்றும் கிருமியால் அவதிப்படுவோர், வேப்பம்பூவை ரசம் வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. அவ்வாறு சாப்பிட்டால், உடலில் ஏற்படும் அதிகப்படியான பித்தம் குறைந்து விடும்.

தோல் வியாதிக்கு மருந்து

வேப்பம் பூவை உலர்த்தி பொடியாக்கி, மஞ்சள் தூளுடன் கலந்து தேய்த்து குளித்து வந்தால், தோல் வியாதி நீங்கி விடும். அந்த பொடியை தணலில் போட்டு வீடு முழுவதும் புகையை பரவவிட்டால், விஷப்பூச்சிகள், கொசு, மூட்டை பூச்சி தொல்லைகள் ஒழிந்து விடும்.

வேப்ப இலைகளை நீரில் போட்டு வைத்து விட்டு, ஓரிரு மணி நேரம் கழித்து குளிக்க வியாதியே வராமல் இருக்கும். வேப்ப இலை கொத்துகள், 4 எடுத்து தண்டு மட்டும் வெந்நீரில் படுமாறு செய்து கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின், அந்த சாறை, 2 நாட்கள் குடித்து வர வயிற்று எரிச்சல் நீங்கும்.

வேப்பிலை சாறுடன் மோர் கலந்து சாப்பிட, வயிற்று பூச்சிகள் ஒழியும். வேப்பம் பூவை லேசாக வாட்டி தலையில் கட்டிக் கொண்டால், பேன், பொடுகு, ஈறு போன்றவை அகன்று விடும். கொழுந்தை தினமும் பச்சையாக சிறிதளவு மென்று வந்தால், வயிறு சம்பந்தமான தொல்லைகள் வரவே வராது. வேப்பிலை கொழுந்தை இடித்து, சாறு பிழிந்து, அதில் சிறிது தேனை சேர்த்து இரவு உணவுக்கு பின் சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள பூச்சிகள் இறந்தோ உயிருடனோ உடலை விட்டு வெளியேறி விடும்.

பட்டுப்போன்ற முடிக்கு...!

வேப்பங்கொழுந்தை, பசு மோர் விட்டு அரைத்து தீப்பட்ட புண்ணில் பூசினால், காயம் சீக்கிரம் ஆறும். வேப்பங்கொழுந்து இலையை அரைத்து, சிறிதளவு எடுத்து, எருமை தயிரில் மூன்று நாட்கள் உட்கொண்டு வந்தால், தொண்டைக்கமறல் குணமாகும். பொடுகுத் தொல்லையால் கஷ்டப்படுபவர்கள், வேப்பிலை எண்ணெயைக் கொண்டு தலைமுடியை மசாஜ் செய்து வந்தால், பொடுகை அடியோடு விரட்டலாம். வேப்பிலை நீரைக் கொண்டு, மாதத்துக்கு தலையை அலசி வந்தால், உங்கள் முடி பொலிவோடும், பட்டுப் போன்றும் இருக்கும்.

வேப்பிலை, முடியின் வளர்ச்சியை தூண்டி, முடி உதிர்வதை குறைக்கும். அதற்கு, வாரம் ஒருமுறை வேப்பிலை எண்ணெயை தலைக்கு தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து குளிக்க வேண்டும். முக்கியமாக வேப்பிலை எண்ணெய் வழுக்கையான பகுதியிலும் முடியை வளரச் செய்யும். தலையில் ஏதேனும் நோய்தொற்றுகள் இருந்தால், வேப்பிலையை கொண்டு விரைவில் போக்கலாம். அதற்கு வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி, 15 நிமிடங்கள் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் தலையை அலச வேண்டும். தலையில் தாங்க முடியாத அரிப்பு இருந்தால், வேப்பிலை நீரை கொண்டு அலசினால், அரிப்பு நின்று விடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us