sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/பல் வலியை போக்கும் ஜாதிக்காய்!

பல் வலியை போக்கும் ஜாதிக்காய்!

பல் வலியை போக்கும் ஜாதிக்காய்!


PUBLISHED ON : ஜூன் 25, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 25, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜாதிக்காய்க்கு அரிய பல மருத்துவ குணங்கள் உள்ளன. ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால், அவை நாளடைவில் மறையும்; முகம் பொலிவடையும் என்கிறது சித்த மருத்துவம்.

ஜாதிக்காயை அரைத்து தயாரித்த பசை, தேமல், படை போன்ற தோல் வியாதிகளை குணமாக்க பயன்படுத்தப்படுகிறது. அம்மை நோயின்போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை பொடி செய்து உணவுக்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும்.

ஜாதிக்காயின் விதை வாந்தியை தடுக்கக் கூடியது.

ஜீரணத்தை தூண்டவல்லது. தசை வலியை போக்குகிறது. விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், மூட்டுவலி, பக்கவாதம் ஆகியவற்றில் பயன்படுகிறது. காலரா நோயின்போது ஏற்படும் தசைப்பிடிப்பு வலியினை போக்க மேல் பூச்சாக உதவுகிறது. இதனுடைய வடிநீர், காலரா

நோயாளிகளின் தண்ணீர் தாகத்தினைச் சரிப்படுத்தும்.

ஜாதிக்காய்த் தூளை சிறிது நீரில் போட்டு ஊற வைத்து குடித்து வந்தால் நா வறட்சி சரியாகும். ஜாதிக்காயின் விதைகளின் மேல் சூழ்ந்துள்ள

சிவப்பு நிற திசு ஜாதி பத்ரி எனப்படுகிறது. ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்ரி, வயிற்றுப் போக்கு, உப்புசம், குடல் வலியை போக்க உதவும்.

பிறந்த குழந்தைகளுக்கு வயிறு உப்புசம் ஏற்படாமல் இருக்க ஜாதிக்காய் விதையை அரைத்து குடிக்க கொடுப்பர். ஜாதிக்காய், சுக்கு, ஓமம் ஆகியவை சேர்ந்த பொடி, ஜீரணத்திற்கு சிறந்த மருந்தாகும்.

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் போட்டு தூளாக இடித்து, மாச்சல்லடையில் சலித்து பவுடராக வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் இரு வேளையும், தலா இரண்டு டீஸ்பூன் பவுடரை, காய்ச்சிய பசும்பாலில் போட்டு கலக்கி, 40 நாட்கள் குடித்தால், உடல் பலம் பெறும்.

எந்தக் கோளாறினால் பல் வலி ஏற்பட்டாலும், ஜாதிக்காயில் பட்டாணி அளவு எடுத்து நைத்து வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்திப் பிடித்து கால்மணி நேரம் வைத்திருந்தால் பல்வலி நீங்கும். காலை, பகல், மாலை ஆக ஒரு நாளைக்கு மூன்று வேளை வைக்க பல் வலி குணமாகும்.

காலரா என்னும் வாந்தி பேதியைக் குணப்படுத்தும் அரிய சக்தி ஜாதிக்காய்க்கு உண்டு. ஒரு ஜாதிக்காயை உடைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு

அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கி, அதிலுள்ள ஜாதிக்காயை எடுக்காமல் அப்படியே வைத்து, தண்ணீரை மட்டும் அரை டம்ளர் அளவு இறுத்து உடனே குடிக்கக் கொடுத்து விடவேண்டும். இந்த விதமாகக் கால் மணிக்கு ஒருமுறை கொடுத்து வந்தால் வாந்தி பேதி குணமாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us